×

ஒரே மாதத்தில் 3 படங்கள் ரிலீஸ்...நடிகர்களை காண்டாக்கிய  விஜய்சேதுபதி...

தமிழ் சினிமாவில் அதிக திரைப்படங்களை தனது கையில் வைத்திருப்பவர் விஜய் சேதுபதி.  தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். மேலும், வெப் சீரியஸ்களிலும் நடித்து வருகிறார்.
 
viajy sethupathi
ஹைலைட்ஸ் :
விஜய் சேதுபதி நடிப்பில் உருவான 3 திரைப்படங்கள் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது. 

இந்நிலையில், அவர் நடிப்பில் உருவான 3 திரைப்படங்கள் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது.  இதில் முதலாவதாக வெளியாகும் திரைப்படம் ‘லாபம்’. இப்படத்தை மறைந்த இயக்குனர் ஜெகநாதன் இயக்கியிருந்தார். இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 9ம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது.

laabam

அடுத்து அரசியல் திரில்லராக வெளியாகும் துக்ளக் தர்பார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் பார்த்திபன் என பலரும் நடித்துள்ளனர். இப்படம் நெட்பிளிக்ஸில் செப்டம்பர் 11ம் தேதியும், அதற்கு ஒரு நாள் முன்பே அதாவது செப்டம்பர் 10ம் தேதி 6.30 மணியளவில் சன் தொலைக்காட்சியிலும் நேரிடையாக வெளியாகவுள்ளது.

darbar

அடுத்து, விஜய் சேதுபதி, டாப்ஸி, ராதிகா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள ‘அனபெல் சேதுபதி’. இது ஒரு ஹாரர் திரைப்படமாகும். இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி என இருவருமே இரட்டை வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை தமிழில் பல திரைப்படங்களை இயக்கிய இயக்குனர்  சுந்தர்ராஜனி மகன் தீபக் சுந்தராஜன் இயக்கியுள்ளார். இப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் செப் 17ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.

vijay sethu

அதிக திரைப்படங்களில் நடிப்பதாலும், ஒரே மாதத்தில் 3 படங்கள் வெளியாவதாலும் இவர் மீது சக நடிகர்கள் பொறாமைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News