Categories: latest news throwback stories

திரிஷா அந்த விஷயத்தில் தமன்னா, சமந்தா மாதிரி இல்லையே..! அதெப்படி?

திரிஷா தமிழ்சினிமாவில் நீண்ட காலமாக நட்சத்திர அந்தஸ்துடன் மின்னி வருகிறார். அவர் நடித்த படங்கள் பெரும்பாலும் சூப்பர்ஹிட் தான். விஜய், திரிஷா காம்போவில் வெளியான பல படங்கள் மாஸ்.

Goat thrisha

திருப்பாச்சி, கில்லி படங்களில் இருவரும் இணைந்து பட்டையைக் கிளப்பி இருப்பார்கள். அந்த வகையில் திரிஷா கோட் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டு இருப்பார். இது குறித்து பிரபல தயாரிப்பாளரிடம் வாசகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். என்னன்னு பார்க்கலாமா…

கோட் படத்துல திரிஷா டான்ஸ் ஆடியிருக்காங்க. அதே நேரத்துல சமந்தா ஆடுன அளவுக்கு அவருக்கு வரவேற்பு கிடைக்கலன்னு தெரியுது. இதைப் பற்றி உங்கள் கருத்து என்னன்னு வாசகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் அளித்த பதில் இதுதான்.

பல திரைப்படங்களில் கதாநாயகிகள் இதே மாதிரி சோலோ டான்ஸ் ஆடியிருக்காங்க. ஆனா எல்லா டான்ஸ்சும் அவர்களுக்கு மிகப்பெரிய புகழைப் பெற்றுத் தந்ததாகச் சொல்ல முடியாது.

புஷ்பா படத்துல சமந்தா ஆடிய டான்ஸ் அவருக்கு மிகப் பெரிய புகழைப் பெற்றத் தந்தது. அது மட்டுமல்லாமல் அந்தப் படத்தோட வெற்றிக்கும் கணிசமான பங்கு இருந்தது. அதே மாதிரி தான் ஜெயிலர் படமும். அது தமன்னாவுக்கு மிகப்பெரிய புகழைப் பெற்றுத் தந்தது.

Also read: ‘மங்காத்தா’ வெங்கட் பிரபு கதையே இல்லை! விட்டுக் கொடுத்த பிரபலம்

அந்த வகையில் ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு அந்தப் பாடலும் காரணமாக அமைந்தது. ஆனால் கோட் படத்தில் திரிஷாவுக்கு அந்த அளவு புகழைப் பெற்றுத் தரவில்லை என்பதே உண்மை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஜோடி படத்தில் துணைகதாபாத்திரத்தில் அறிமுகமானார் திரிஷா. தொடர்ந்து படிப்படியாக தமிழ்சினிமாவில் முன்னேறினார். மௌனம் பேசியதே, மனசெல்லாம் என்று வளர்ந்த அவர் சாமி படத்தில் பட்டையைக் கிளப்பத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. கமல், ரஜினி, சிம்பு, விஜய், அஜீத் என பல முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்த பெருமைக்குரியவர் இவர் தான்.

 

 

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v