×

 டிஸு பேப்பர் மாதிரி தூக்கி போட்டுடுறாங்க... யாரை சொல்றாங்க லாஸ்லியா?

கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களை ஒருவரான லாஸ்லியாவுக்குத்தான் முதன் முதலாக ஆர்மி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. லாஸ்லியாவின் ஆர்மி அவரது புகழை பாடிக்கொண்டு லாஸ்லியாவை தினந்தோறும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக்கிக் கொண்டிருந்தனர்.

 

பிக்பாஸில் கிடைத்த புகழை வைத்து லாஸ்லியா தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அதுவும் முதல் படத்திலே பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக . "பிரண்ட்ஷிப்"  என்ற படத்தில் நடித்துள்ளார். ப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி அட்டகாசமான வரவேற்பை பெற்றிருந்தது.

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு என்பதால் படப்பிடிப்புகள் ஏதுமின்றி சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் லாஸ்லியா தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோபமாக முறைக்கும் புகைப்படமொன்றை வெளியிட்டு " சில நேரங்களில் நாம்  டிஸு பேப்பர் தூக்கி எறியப்படுகிறோம், இருந்தாலும் அதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்" என கூறி பதிவிட்டுள்ளார். இந்த மறைமுகமான பதிவில் யாரை குறிப்பிடுகிறார் லாஸ்லியா என குழப்பத்துடன் யோசித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News