இந்தியன் 2லாம் சும்மா? தக் லைஃப் செஞ்ச சம்பவம் பாருங்க.. ஆரம்பமே இப்படினா?
தமிழ் சினிமாவில் நடிப்பின் இலக்கணமாக திகழ்ந்து வருபவர் நடிகர் கமல். சிவாஜிக்கு அடுத்தபடியாக நடிப்பு என்று சொன்னால் கமல்ஹாசனை தான் அனைவரும் உதாரணமாக சொல்வார்கள். சிவாஜி படங்களை போன்று கமல்ஹாசன் நடித்த ஒவ்வொரு படங்களுமே அடுத்து வரும் இளம் தலைமுறையினருக்கு ஒரு பாடமாக கண்டிப்பாக இருக்கும். புது புது தொழில்நுட்பங்களை தன் படங்களில் பயன்படுத்தி ஏதாவது ஒரு புது முயற்சியை எடுத்துக் கொண்டே இருப்பவர் கமல்.
இவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் இந்தியன் 2. இதனுடைய முதல் பாகம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே உலுக்கியது என்று சொல்லலாம். அப்போதைய காலகட்டத்தில் லஞ்சம் என்பது தலைதூக்கி இருந்தது. அதை மையப்படுத்தி இந்தியன் படம் வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு வெளியானது.
முதல் பாகத்திற்கு இருந்த வரவேற்பு இரண்டாம் பாகத்திற்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இருந்தாலும் அந்த படத்தில் வேறென்ன சங்கர் சொல்லப் போகிறார் என எதிர்பார்த்து காத்திருந்தனர் ரசிகர்கள். ஆனால் அரைத்த மாவையே அரைத்து இருக்கிறார் என்பது போல படத்தின் கதை இருந்தது. திரைக்கதையில் குழப்பம் இருந்தது. 225 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தியன் 2 படத்தின் மொத்த வசூலே உலக அளவில் 150 கோடி மட்டும் தான் வசூலித்திருந்தது.
அது மட்டுமல்ல மிகப்பெரிய அளவில் ட்ரோலுக்கும் ஆளாகியது இந்தியன் 2 திரைப்படம். அதன் பிறகு கமல் நடிக்கும் திரைப்படம் தக் லைஃப். மணிரத்தினம் இயக்கத்தில் கமல் சிம்பு ஆகியோர் நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் தான் தக் லைஃப். ஒரு பக்கம் கமல் இன்னொரு பக்கம் சிம்பு என இரு தரப்பு ரசிகர்களும் படத்தை பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தக் லைஃப் படத்தின் வியாபாரம் சமீபத்தில் தான் தொடங்கி இருக்கிறது. இந்தப் படத்தின் ஆந்திரா தியேட்டரிக்கல் உரிமை 20 கோடி வரை போயிருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் முக்கியமாக பார்க்கப்படுவது என்னவெனில் கமலின் இதுவரை வந்த திரைப்படங்களில் எந்த ஒரு திரைப்படமும் இருபது கோடி என்ற வகையில் தியேட்டரிக்கல் உரிமை போனதே இல்லையாம்.
தக் லைஃப் திரைப்படம் தான் இந்த அளவு தியேட்டரிக்கல் உரிமையில் விற்றிருப்பதாக தெரிகிறது. அதைப்போல கர்நாடகாவின் தியேட்டரிக்கல் உரிமையை 5 ஸ்டார் கதிரேசன் 15 கோடிக்கு வாங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் இது ஒரு நல்ல ஒரு ஆரம்பம் என்று கோடம்பாக்கத்தில் பேசி வருகிறார்கள்.