PR tr
2001ல் தீனா படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜீத்தின் நடிப்பில் அதிரடியாக ரிலீஸ் ஆனது. அந்தப் படத்தில் இருந்து தல என்ற பட்டமும் அஜீத்துக்கு சேர்ந்து கொண்டது. அவருக்கும், இயக்குனருக்கும் ஒருசேர புகழைத் தந்த படம் அது. அந்தப் படம் முதலில் பிரசாந்தைத் தேடி வந்தும் மிஸ் பண்ணிட்டாங்க. அப்படி என்ன நடந்தது. வாங்க பார்ப்போம்.
நடிகர் பிரசாந்துக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரது தந்தை தியாகராஜன் தயாரித்து இயக்கிய அந்தகன் படம் வந்தது. இது அவருக்கு கம்பெக்கைக் கொடுத்துள்ளது. படத்தை அனைத்துத் தரப்பு ரசிகர்களும் ரசித்துள்ளனர். இந்த நிலையில் பிரசாந்த், தியாகராஜன் என இருவருவே சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேட்டியைக் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். படத்துக்கும் நல்ல புரோமோஷன் கொடுத்தார்கள். படமும் எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெற்றது.
dheena
சமீபத்தில் தியாகராஜன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் ஏ.ஆர்.முருகதாஸ் முதன் முதலில் ஆக்ஷன் படம் ஒன்றை இயக்குவதாக இருந்தார். அந்தக் கதையை முதலில் என்னிடம் தான் சொன்னார். அது தான் தீனா படம். ரொம்ப அர்ஜென்டா பண்ணனும்னு சொன்னார்.
அந்த நேரம் பிரசாந்த் ரொம்ப பிசியாக இருந்தார். 10 நாள் பொறுங்க. பிரசாந்த் ப்ரீயானதும் கதையை சொல்றேன்னு சொன்னேன். அதற்குள் அவர் வேறு நடிகரிடம் கதை சொல்லி ஓகே வாங்கி விட்டார். அதே மாதிரி தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்துக்கு தபுவுக்கு ஜோடின்னு பிரசாந்தை சொன்னாங்க. அது செட்டாகாது.
‘ஐஸ்வர்யாராயை வைங்க’ன்னு சொன்னேன். அப்படி தான் அது மிஸ் ஆனது. அதே மாதிரி தனுஷோட அண்ணன் செல்வராகவன் வந்து ஒரு கதையை சொன்னாரு. அது பிரசாந்த் கேட்டதும் இது பள்ளிக்கூடத்துல படிக்கிற மாணவனுக்குள்ள கதை. எனக்கு அது செட்டாகாதுன்னு சொல்லி கொஞ்ச வயசுல பாருங்கன்னாரு. அதுதான் துள்ளுவதோ இளமை. உடனே தனுஷை வைத்து எடுத்தாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நடிகரும் தவெக…
TVK Karur:…
Vijay TVK…
ரங்கராஜ் முகத்திரை…
TVK Vijay:…