
Cinema News
ப்ரொடியூசர்களை மொட்டை அடிக்கும் ஹீரோக்கள்.. அழிவின் விளிம்பில் தமிழ் சினிமா.. ஆதங்கத்தில் பிரபலம்
தென்னிந்திய சினிமாக்களில் தற்போது மிகவும் மோசமான நிலையில் இருப்பது தமிழ் சினிமா தான். அதிலும் 2025 ஆம் ஆண்டில் இதுவரை வெளியான திரைப்படங்களில் எதுவும் பெரிதாக வெற்றி பெறவில்லை. இண்டஸ்ட்ரிக்கு லாபகரமான படங்கள் எதுவும் அமையவில்லை என மன வருத்தத்துடன் கூறியுள்ளார் திருப்பூர் சுப்ரமணியன்.
மேலும் அவர் கூறியதாவது, “தமிழ் சினிமா அழிவதற்கு காரணம் இங்கு உள்ள ஹீரோக்கள் தான். இன்றைக்கு ஒரு ஹீரோவுக்கு 200 கோடி சம்பளம் என்றால் அதில் 100 கோடி அட்வான்ஸாக கொடுக்க வேண்டும். இவ்வளவு பெரிய பணத்தை புரொடியூசர்கள் வைத்திருக்க மாட்டார்கள். பைனான்சியரிடம் அல்லது வங்கியில் இருந்து கடன் பெற்று அந்தத் தொகையை தான் கொடுக்கிறார்கள். பெரிய பட்ஜெட் பெரிய படம் என்றால் குறைந்தது ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் படம் எடுக்கிறார்கள்”.

”இவ்வளவு காலத்துக்கும் ப்ரொடியூசர் வாங்கிய பணத்திற்கு வட்டி கட்டி கொண்டே இருக்க வேண்டும். இதில் என்ன லாபம் இருக்கும். அதனால்தான் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் யாரும் படம் எடுக்க முன் வரவில்லை. சூப்பர் குட் பிலிம்ஸ், ஏவிஎம் போன்ற நிறுவனங்களில் இல்லாத பணமா? ஏன் வரமாட்டுகிறார்கள் என்றால் இங்கே வந்தால் மொத்த பணத்தையும் மொட்டை அடித்து விடுவார்கள்”.
’மொத்த பணமும் காலி பண்ணி தலையில் துண்டை போட்டு அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் தான் அவர்கள் உள்ளே வர யோசிக்கிறார்கள். இதில் இன்னும் கொடுமை என்னவென்றால் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் சிவகார்த்திகேயனின் மதராஸி படம் இன்னும் போனியாகவில்லை. சிவகார்த்திகேயனின் முந்தைய படம் அமரன் பெரும் வெற்றி பெற்றதால் மதராஸி படத்தை அதிக விலைக்கு விற்க தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்கள்”.
”ஆனால் அந்த விலைக்கு படத்தை வாங்குவதற்கு எந்த விநியோகஸ்தர்களும் தயாராக இல்லை என்பதே உண்மை. அது மட்டும் இல்லை சூர்யாவின் கருப்பு ஏன் அடுத்த வருடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் விஜயின் ஜனநாயகன் படம் கூட இன்னும் விற்பனையாகவில்லை”.
”அதற்கு காரணம் தயாரிப்பாளர்கள் அதிக விலை கேட்பதுதான். எங்கள் விநியோகஸ்தர்கள் அவ்வளவு விலைக்கு வாங்கி தியேட்டரில் அந்த படம் எங்களுக்கு திரும்ப கிடைப்பதில்லை. நஷ்டத்தில் தான் முடிகிறது. இப்படியே போனால் தமிழ் சினிமா மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படும்”. என்று அவர் கூறியுள்ளார்.