Categories: Cinema News latest news throwback stories

ஹீரோக்கள் எல்லாம் தயாரிப்பாளர்கள் வயித்துல அடிக்கிறாங்க!.. உண்மையை உடைத்த விநியோகஸ்தர்…

சினிமாவை பொறுத்தவரை அதில் ஹீரோக்களுக்குதான் அதிக முக்கியத்துவம் இருக்கிறது. கதாநாயகியோ, இயக்குனரோ, தயாரிப்பாளரோ யாராக இருந்தாலும் ஹீரோவாக நடிப்பவர்களை எதிர்த்துக்கொண்டு எதுவுமே செய்ய முடியாது.

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் காலத்தில் இருந்தே இந்த விஷயங்கள் சினிமாவில் இருந்து வருவதை பல பிரபலங்கள் வெளிப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் பிரபல சினிமா விநியோகஸ்தரான திருப்பூர் சுப்ரமணியன் தொடர்ந்து தனது பேட்டிகளில் திரையுலகில் நடக்கும் உண்மைகளை வெளிப்படுத்தி வருகிறார்.

இப்படி ஒரு பேட்டியில் கூறும்போது தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள்தான் அனைத்தையும் முடிவு செய்கின்றனர். அதிலும் இந்த ஓ.டி.டி எல்லாம் வந்த பிறகு அவர்கள் தங்கள் சம்பளத்தை அதிகரித்துக்கொண்டே செல்கின்றனர். முன்பு பத்தில் இருந்து இருபது கோடி வரை சம்பளம் வாங்கிய தனுஷ், ஜெயம் ரவி போன்ற நடிகர்கள் எல்லாம் இப்போது 50 கோடி கேட்கின்றனர்.

அதற்கு தகுந்தாற் போல தயாரிப்பாளர்களும் படம் நல்ல வெற்றியை அடைந்தால் அதன் வசூல் சாதனையை வெளியிட்டு சந்தோஷப்படுகின்றனர். ஆனால் அதையே அட்வாண்டேஜாக கொண்டு ஹீரோக்கள் தங்கள் சம்பளத்தை அதிகரிக்கின்றனர். ஒரு படம் எடுப்பதில் அதிக கஷ்டம் தயாரிப்பாளருக்குதான்.

படம் மட்டும் ஒழுங்காக ஓடவில்லை என்றால் தயாரிப்பாளருக்குதான் அது நஷ்டம். ஆனால் கதாநாயகர்களுக்கு அதில் எந்த நஷ்டமும் கிடையாது. ஆனாலும் தயாரிப்பாளர்களிடம் அதிக சம்பளம் கேட்டு அவர்கள் வயிற்றில் அடிக்கின்றனர் நடிகர்கள் என கூறியுள்ளார் திருப்பூர் சுப்ரமணியன்.

இதையும் படிங்க: முந்தானையில் ஆட்டோகிராஃப் கேட்ட பெண்!.. அதற்கு எம்ஜிஆர் கொடுத்த அசத்தலான பதில்

Published by
Rajkumar