
Cinema News
கூலி பக்கத்துல கூட மதராஸி போக முடியாது!.. திருப்பூர் சுப்பிரமணியன் பேட்டி!….
Madharaasi: ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் மதராஸி. தர்பார் திரைப்படத்திற்கு பின் முருகதாஸ் எந்த படத்தையும் இயக்காத நிலையில் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைத்து மீண்டும் கம்பேக் கொடுத்திருக்கிறார். சினிமாவில் நடிக்க துவங்கியது முதலே காதல் கலந்த காமெடி படங்கள் மட்டுமே நடிக்க வந்த சிவகார்த்திகேயன் கடந்த சில வருடங்களாகவே தன்னை ஒரு ஆக்சன் ஹீரோவாக காட்டி கொள்ள முயற்சி செய்து வருகிறார்.
ஏனெனில் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வேண்டும் எனில் ஆக்சன் ஹீரோவாக வேண்டும் என்பதை புரிந்து கொண்டு அமரன் படத்திலேயே நிறைய ஆக்சன் காட்சிகளை நடித்திருந்தார். அந்த படம் 300 கோடி வசூல் செய்தது. அடுத்து விஜய்க்கு துப்பாக்கி எனும் ஆக்சன் படத்தை கொடுக்க முருகதாஸுடன் கூட்டணி அமைத்து மதராஸி படத்தில் நடித்திருக்கிறார்.

அவர் ஆசைப்பட்டது போலவே மதராஸி படத்தில் அசத்தலான ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. படம் பார்த்த பலரும் பாராட்டுவது இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ஆக்சன் காட்சிகளைத்தான். குறிப்பாக வில்லன் வித்யூத் ஜம்வாலுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே வரும் சண்டை காட்சிகளும் படத்தின் இரண்டாம் பாதியில் இருந்து சண்டை காட்சிகளும் ஆக்சன் விரும்பிகளுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான மதராஸி நல்ல வசூலை பெற்று வருகிறது. கடந்த மூன்று நாட்களில் இப்படம் 50 கோடி வசூலை தொட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பேசுகிறார்கள். ஆனால் பட தயாரிப்பு நிறுவனம் இதுவரை எதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில் வினியோக சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்தார் அப்போது ‘கூலி பட வசூலை மதராஸி வசூல் முறியடிக்குமா? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன சுப்பிரமணியம் ‘அதற்கு வாய்ப்பே இல்லை. கூலி படத்தை மதராஸி படத்தால் நெருங்கவே முடியாது. ஆனால் மதராஸி படம் நல்ல வசூலை கொடுக்கிறது. இந்த படத்தில் விநியோகஸ்தர்களுக்கு லாபம் இல்லை. ஏனெனில் இப்படத்தை தயாரிப்பாளரே நேரடியாக வெளியிட்டார். கண்டிப்பாக இப்படம் லாபம்தான்’ எனக்கூறி இருக்கிறார்.