
Cinema News
எனக்கு பாட வாய்ப்பே வராம போனதற்கு அந்த பாட்டுதான் காரணம்!.. புலம்பிய டி.எம்.எஸ்..
Published on
By
எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் முதல் ரஜினி வரை திரையுலகில் பல பாடல்களை பாடியவர் டி.எம்.எஸ். பல நடிகர்களுக்கும் இவர் பாடியிருந்தாலும் எம்.ஜி.ஆர் – சிவாஜி இருவருக்கும் ஆஸ்தான பாடகராக டி.எம்.எஸ் இருந்தார். அவர்கள் இருவருக்கும் பல காலத்தால் மறக்க முடியாத பாடல்களை பாடியுள்ளார்.
குறிப்பாக எம்.ஜி.ஆர், சிவாஜி இருவருக்கும் ஏற்றதுபோல் குரலை மாற்றி பாடக்கூடியவர் இவர். அவர்கள் இருவர் மட்டுமில்லாமல் நாகேஷ், முத்துராமன், ஜெய் சங்கர் உள்ளிட்ட பலருக்கும் இவர் பாடியுள்ளார். ரஜினிக்கும் சில பாடல்களை பாடியிருக்கிறார். துவக்கத்தில் பக்தி பாடல்களை பாடி அதன்பின் சினிமா பாடல்களை பாட துவங்கினார். 1950ம் வருடம் முதல்1972 வரை பல நூறு பாடல்களை பாடி சாதனை படைத்தார்.
tms
எம்.ஜி.ஆருக்கு இவர் பாடிக்கொண்டிருக்கும்போதே எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் ஜேசுதாஸ் ஆகியோரை எம்.ஜி.ஆர் தனது படங்களில் பாட வைத்தார். அதன்பின் மெல்ல மெல்ல டி.எம்.சவுந்தரராஜனுக்கு பாடும் வாய்ப்புகள் குறைந்துபோனது.
இந்நிலையில், ஒருமுறை ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்த டி.எம்.எஸ் ‘ஒருதலைக்காதல் படத்தில் பாட வேண்டும் என டி.ராஜேந்தர் என்னை அணுகினர். பாடல் வரிகளை படித்து பார்த்தேன். ‘நான் ஒரு ராசியில்லா ராஜா’ என அந்த பாடல் துவங்கியதால் அந்த பாடலை நான் பாடமாட்டேன் என்றேன். அதற்கு அவர் ‘நீங்களா பாடுகிறீர்கள்..படத்தில் அந்த ஹீரோ பாடுகிறார் என ஏதேதோ சொல்லி என்னை சம்மதிக்க வைத்தார். அந்த பாடலை பாடிமுடித்த பின் அடுத்து ஒரு பாடல் கொடுத்தார். ‘என் கதை முடியும் நேரமிது’ என்கிற அந்த பாடலை பாடினேன். அதோடு சரி எனக்கு பாட வாய்ப்பே வரவில்லை. அந்த பாடல் பாடிய பின் எனக்கு மார்க்கெட்டே போய்விட்டது’ என புலம்பியிருந்தார்.
ரங்கராஜ் முகத்திரை கிழிப்பு : மாதம்பட்டி ரங்கராஜ் சினிமா ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்டா என்பவரை ஆசை வார்தத்தை கூறி ஏமாற்றி...
தீயாய் வேலை செய்யும் விஜய் : விஜய் பேச்சில் ஏற்பட்ட தடுமாற்றம் : விஜயின் பேச்சு பல விமர்சனங்களை சந்தித்தாலும் இன்று...
சினிமா நடிகர் பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜி மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூத்த பத்திரிக்கையாளர் சேகுவேரா கூறி...
Vijay TVK: திருச்சியில் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்த விஜய் இன்று நாமக்கல் , கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த...
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் பாரதிராஜா. தன்னுடைய படங்களில் புதுமை புகுத்தி அதுவரை வந்து கொண்டிருந்த படங்களிலிருந்து...