11.43 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1117 கோடி நிவாரணம்... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``சுமார் 11.43 லட்சம் விவசாயிகளுக்கு மத்திய அரசின் நிதியுதவியை எதிர்நோக்கி ரூ.1,116.97 கோடி நிவாரணம் தரப்படும். 6.81 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான வேளாண், தோட்டக்கலைப் பயிர்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. புயல் நிவாரணமாக ஏற்கனவே ரூ.543.10 கோடி விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை மத்தியக் குழு பிப்ரவரி 3, 4, 5-ல் மீண்டும் பார்வையிடுகிறது.
ஜனவரி மாதத்தில் இயல்பாகப் பெய்ய வேண்டிய 12.3 மீ.மீக்கு பதில் 136.3 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இயல்பான மழை அளவைக் காட்டிலும் 1,108 விழுக்காடு கூடுதலாக மழை பெய்துள்ளது. தமிழகத்தின் டெல்டா, தென் மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 25 செ.மீ மழை பதிவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி மாதம் தமிழகத்தில் பெய்த கனமழையினால் பாதிப்பிற்குள்ளான 6,81,334.23 ஹெக்டர் பரப்பளவிலான வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு சுமார் 11.43 லட்சம் விவசாய பெருமக்களுக்கு ரூ.1,116.97 கோடி இடுபொருள் நிவாரணமாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும். pic.twitter.com/6aIG23gRQY
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) February 1, 2021
மேலும், இணையவழி வகுப்புகளில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்க ஏதுவாக 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும். 9,69,047 மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா கார்டுகள் வீதம் ஏப்ரல் மாதம் வரை வழங்கப்படும்’’ என்றும் தெரிவித்துள்ளார்.