தொடர்ந்து நான்காவது முறையாக ஸ்டாலினுக்கு எடப்பாடியார் சவால்... பதில் சொல்வாரா?

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சி தலைவர்களும் சுறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதில், திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது பிரச்சாரத்தில் தமிழக அரசின் மீது கடுமையாக குற்றச்சாட்டுக்களை வைத்து வருகிறார். இதற்கு பதிலளிக்கும் விதமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்தியா டுடே குழுமம் நடத்திய கருத்தரங்கில் மீண்டும் சவால் ஒன்றை விடுத்து இருக்கிறார்.
முதலில், தமிழகத்தில் நடக்கும் ஆட்சியின் மீது தொடர் குற்றச்சாட்டுகளை முக ஸ்டாலின் முன் வைத்த போது, அதற்கு பதிலளிக்கும் விதமாக ஒரே மேடையில் துண்டு சீட்டு இல்லாமல் ஸ்டாலினுடன் விவாதிக்க நான் தயார் என்றும் ஸ்டாலின் தயாரா என்றும் கேள்வி எழுப்பினார். ஆனால், நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என்று ஸ்டாலின் விவாதத்திற்கு வர சாக்கு தெரிவித்தார். தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது மீண்டும் விவாத்திற்கு அழைத்தார். இதற்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் எந்த பதிலும் அளிக்காத நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று இந்தியா டுடே குழுமம் நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டார். அப்போது, ஒரே மேடையில் ஸ்டாலினுடன் துண்டு சீட்டு இல்லாமல் விவாதிக்க தயார் என்று தெரிவித்தார். முதலமைச்சர் ஸ்டாலினை நேரடியாக விவாதத்திற்கு இதுவரை 4 முறை அழைத்துள்ளார்.
தொடர்ந்து, நாளை தி.மு.க தலைவர் ஸ்டாலின் இந்தியா டுடே கருத்தரங்கில் கொள்ள இருக்கிறார். முதலமைச்சரின் இந்த சவால் குறித்து, ஸ்டாலினிடமே கேள்வி முன் வைக்கப்படும் என இந்தியா டுடே தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியர் ராகுல் கன்வால் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.