×

குறைதீர்க்கும் 1100 சிறப்பு அழைப்பு எண்; செல்போன் செயலி! முதல்வரின் திட்டத்துக்கு அமோக வரவேற்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த வீட்டிலிருந்தபடியே குறைகளை தெரிவிக்கும் ”1100” திட்டம், நாட்டிலே முதல் முறையாக அறிவிக்கப்பட்ட நவீன குறைதீர் யோசனைக்கு மக்கள் வரவேற்பு!
 

மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சனை, சாலை பிரச்சனை உள்ளிட்ட எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை உடனடியாக தீர்க்கும் படியான ஒரு திட்டத்தை முதல்வர் பழனிசாமி கடந்த 13-ம் தேதி  தொடங்கி வைத்தார். அதன்படி, 1100 என்கிற குறை தீர்ப்பு எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டமாக இது தொடங்கப்பட்டுள்ளது. 

தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை 1100 என்கிற எண்ணுக்கு அழைத்துத் தெரிவித்தால், அந்தப் பிரச்சனை உடனடியாக தீர்க்கப்படும். பொதுமக்கள் செல்போன் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் புகார்களைத் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக `CM HELPLINE CITIZEN’ என்ற செயலியையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

`1100’ குறை தீர்ப்பு எண்ணின் சிறப்பு அம்சங்கள்:

சென்னை சோழிங்கநல்லூரில் 12.78 கோடி ரூபாய் செலவில் 100 இருக்கைகள் கொண்ட உதவி மையம் இதற்காக அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களில் இருந்தபடியே 1100 என்ற அலைபேசி எண்ணுக்கு காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அழைத்து புகார்களைத் தெரிவிக்கலாம். 
இணையதளம், மின்னஞ்சல்,  CM HELPLINE CITIZEN செயலி வழியாக 24 மணி நேரமும் புகார்களை தெரிவிக்கலாம். பொது மக்களின் புகார்கள் குறித்த துறைகளுக்கு அனுப்பபட்டு குறிப்பிட்ட கால வரம்பிற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். 

குறைகளை விரைந்து களைவதற்காக மனுதாரரிடம் ஆதார் எண் அல்லது குடும்ப அட்டை எண் கேட்கப்படும். பொது மக்களின் மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து மனுதாரருக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.  
இத்திட்டத்தின் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர், தலைமைச் செயலாளர் அனைத்து துறை செயலாளர்களால்  வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்தத் திட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்புக் கிடைத்திருக்கிறது. 
 

From around the web

Trending Videos

Tamilnadu News