×

50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் அனுமதி -  தமிழக அரசு அறிவிப்பு

 
theatre

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் கடந்த வருடம் மார்ச் மாதம் முதலே திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இடையில், கடந்த வருடம் நவம்பம் மாதம் முதல் மார்ச் மாதம் வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் தியேட்டர்கள் மூடப்பட்டது. தற்போது தியேட்டர்கள் மூடி 100 நாட்களுக்கும் மேலாகி விட்டது. எனவே, ஏராளமான திரைப்படங்கள் அமேசான் பிரைம், நெட்பிலிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களில் வெளியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்தும் தியேட்டர்களை திறக்க அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

theatre

இந்நிலையில், தமிழகத்தில் 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் கொரோனா வழிபாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு 23ம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைகிறது. எனவே, 23ம் தேதி முதல் தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்படவுள்ளது.

stalin

From around the web

Trending Videos

Tamilnadu News