×

தமிழகத்தில் முற்றிலும் ஒழிந்த காலரா பாதிப்பு - அதிமுக அரசு சாதனை
 

 

சில வருடங்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் காலரா நோயால் பலரும் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால், அதிமுக அரசு கொண்டுவந்த கழிவூ நீர் மேலாண்மை திட்டம் மூலம் காலாரா நோய் என்பதே தமிழகத்தில் இல்லை என்கிற நிலை உருவாகியுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட புள்ளிவிபரத்தின்படி, கடந்த 2011ம் ஆண்டிலிருந்து காலரா நோயால் ஒருவர் கூட இறக்கவில்லை என்பது இதற்கு சான்றாகும்.

கழிவு நீர்பராமரிப்பு மற்றும் பாதாள சாக்கடை ஆகிய திட்டங்களின் மூலம் தமிழக அரசு எடுத்த தீவிர நடவடிக்கை காரணமாகவே காலரா நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. 

2007ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் 3544 பேர் காலராவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதாவது, வருடத்திற்கு சராசரியாக 709 பேர் பாதிக்கப்பட்டனர்.

அதேநேரம் 2012ம் ஆண்டு அதிமுக அரசு பதவியேற்றது. 2019ம் ஆண்டு வரை இந்த 8 வருடங்களில் வெறும் 710 பேர் மட்டுமே காலராவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதாவது ஆண்டுக்கு சராசரியாக 89 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆனால், யாரும் பலியாகவில்லை.

2017ம் ஆண்டு பதவியேற்றது முதல், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான சிறப்பான ஆட்சியின் கீழ் ஒருவர் கூட காலரா நோயால் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் காலரா நோயை அதிமுக அரசு வென்று விட்டது என்றால் அது மிகையில்லை.

From around the web

Trending Videos

Tamilnadu News