×

கொரோனா காலத்திலும் தமிழகம் செய்த சாதனை...  65 ஆயிரம் கோடி ஒப்பந்தங்கள்...

 

2020ம் ஆண்டு உலகம் முழுவதையும் கொரோனா ஆட்டி படைத்தது. இதில் தமிழகமும் தப்பவில்லை. ஆனால், இந்த இக்கட்டான காலகட்டத்திலும் அதிமுக ஆட்சியில் தமிழகம் பல சாதனைகளை செய்து முதன்மை மாநிலமாக திகழ்கிறது. இந்த ஆண்டில் மட்டும் சுமார் 65 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையுயெழுத்தாகியுள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. எனவே, அனைத்து நாடுகளிலும் பொருளாதாரம் மெல்ல மெல்ல வளர்ச்சி அடையும். ஆனால், கொரோனா உச்சத்தில் இருந்த போதே தமிழகம் முதலீடுகளை ஈர்த்துள்ளது அதிமுக ஆட்சியின் சாதனையாக பார்க்கப்படுகிறது. முதல்வர் பழனிச்சாமி சிறப்பாக செயல்பட்டு பல நாடுகளிலிருந்தும் முதலீடுகளை ஈர்த்துள்ளார் என்றால் அது மிகையாகாது.

இந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை இந்திய அளவில் அதிக முதலீகளை ஈர்த்த முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. 2020 ஏப்ரல் முதல் செப்டம்பர வரை ரூ.31,464 கோடி மதிப்பீட்டில் 42 ஒப்பந்தங்களும், அக்டோபர் 12ம் தேதி ரூ.10, 055 கோடி மதிப்பில் 14 புதிய தொழில் திட்டங்களும் தமிழகத்தில் துவங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் பழனிச்சாமி முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. மேலும், டிசம்பரில் ரூ. 24,500 கோடி மதிப்பில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது. அதோடு, ரூ.19,995 கோடி மதிப்பில் 18 புதிய தொழில் திட்டங்கள் ஒப்பந்தம் ஆகியது. இதன் மூலம் 26,509 பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள். மேலும், 27,324 பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் ரூ. 4,456 கோடி மதிப்பில் 5 நிறுவனங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். அதோடு, ரூ. 47 கோடி மதிப்பில் காமர் ஐடி ஃசோன் என்கிற நிறுவனத்தையும் அவர் தொடங்கி வைத்தார். இதன் மூலம் 385 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். 

கொரோனா கோலோச்சிய காலத்திலும் தமிழகம் இவ்வளவு முதலீடுகளை ஈர்த்து இந்திய அளவில் முதன்மை மாநிலமாக திகழ்வது, 2021ம் ஆண்டு மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News