சிறப்பு காட்சிக்கு அனுமதி…. சொல்லி அடிக்கப்போகும் சூர்யா!

 
சிறப்பு காட்சிக்கு அனுமதி…. சொல்லி அடிக்கப்போகும் சூர்யா!

கருப்பு திரைப்படம்:

தென்னிந்த சினிமாவில் நட்சத்திர நடிகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா தற்போது "கருப்பு" திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் வருகிற மே 14ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

சிறப்பு காட்சிக்கு அனுமதி…. சொல்லி அடிக்கப்போகும் சூர்யா!

தமிழ் சினிமாவின் ஹிட் இயக்குநர்களில் ஒருவரான ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படத்தில் சூர்யாவின் ஜோடியாக நடிகர் திரிஷா நடித்திருக்கிறார்.

மேலும் இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் தான் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மேலும், சுவாஷிகா, எந்திரன், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மயா ரவி, நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

சிறப்பு காட்சிக்கு அனுமதி:

சிறப்பு காட்சிக்கு அனுமதி…. சொல்லி அடிக்கப்போகும் சூர்யா!

கருப்பு திரைப்படத்திற்காக அதீத ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது மகிழ்ச்சியான செய்தி ஒன்று கிடைத்திருக்கிறது. ஆம் தமிழக அரசு அனுமதி உடன் இந்த திரைப்படம் சிறப்பு காட்சிகளுடன் வெளியிட உள்ளனர்.

அதாவது வருகிற மே 14ஆம் தேதி மறுநாள் 15ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களிலும் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதனால் படக்குழு எதிர்பார்த்த வசூலை விட அதிகமாக கருப்பு திரைப்படத்திற்கு லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சூர்யாவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தியாக அமைந்துள்ளது.

From Around the web