அண்மை காலமாக விஜய் படங்கள் சிக்கலில் மாட்டுவது தொடர்கதையாகவே மாறி வருகிறது. அது தலைவா படத்தில் ஆரம்பித்து, மெர்சல் , சர்கார் என தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. பிகிலில் அந்த பிரச்சனை வரவில்லை.
ஆனால் பீஸ்ட் அதனை தற்போது ஆரம்பித்து விட்டது. ஆம், இப்பட ட்ரைலர் வெளியானது. அதில் சில காட்சிகளில் தீவிரவாத கும்பலை விஜய் ராக்கெட் ஏவி அழிப்பது போல காட்டப்பட்டது. அதனை பார்த்த குவைத் அரசு இதில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்து உள்ளனர் அதனால், பீஸ்ட் குவைத்தில் தடை வாங்கியது.
சரி வெளிநாட்டில் தான் என்று பார்த்தால், தற்போது தமிழகத்திலும் இது தொடர்ந்துள்ளது. ஆம், தமிழகத்தில் பீஸ்ட் படத்திற்கு தடை கோரி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியக்கர்களை தவறாக சித்தரித்து உள்ளதாக கூறப்பட்டு, தடை கேட்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்களேன் – மாறன் படத்தால் தமிழ் சினிமாவுக்கு தனுஷ் வைத்த ஆப்பு!…இது என்னடா சோதனை.!
தமிழக முஸ்லீம் லீக் , உள்துறை செயலாளர் எஸ்.ஆர்.பிரபாகர் அவர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளது. அதில், ‘ தற்போது உலகம் முழுவதும் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சமயம். பீஸ்ட் படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரிப்பது தேவைற்ற பிரச்சனைகளை எழுப்ப கூடும் . அதனால் படத்தை தடை செய்யவேண்டும்.’ என கூறியுள்ளனர்.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…