ஏப்ரல் 30ல் ஓடிடி-க்கு வரும் நட்டியின் TN 2026 - எந்த ஓடிடியில் தெரியுமா?

 
ஏப்ரல் 30ல் ஓடிடி-க்கு வரும் நட்டியின் TN 2026 - எந்த ஓடிடியில் தெரியுமா?

திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்ற நட்டி என்கிற நடராஜன் நடிப்பில் உருவான அரசியல் நையாண்டித் திரைப்படமான TN 2026: தங்க நட்சத்திரம் அதன் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் தம்பி ராமைய்யா மகன் இயக்குநர் உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நட்ராஜ் மற்றும் தம்பி ராமையா நடிப்பில் வெளியான TN 2026 திரைப்படம், வரும் ஏப்ரல் 30, 2026 முதல் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.

இந்தத் திரைப்படம் ஒரு வட இந்திய இளைஞன் பிழைப்புக்காகச் சென்னைக்கு வந்து, எப்படித் திரையுலகில் நுழைந்து ஒரு சூப்பர் ஸ்டாராக உருவெடுக்கிறான் என்பதையும், பின் அவர் அரசியலில் நுழைந்து எதிர்கொள்ளும் சவால்களையும் மையமாகக் கொண்டது. தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலை நகைச்சுவையுடன் சொல்லுவதாக இந்த படம் அமைந்துள்ளது.

குறிப்பாக படம் வெளியான சமயத்தில், இது நடிகர் விஜயின் அரசியல் வருகையைக் கிண்டல் செய்வது போல் இருப்பதாக ஒரு தரப்பினரால் பேசப்பட்டது. மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி இந்தப் படம் சில அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் எனக் கூறி, இப்படத்தைத் தடை செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இருப்பினும், தடைகளைத் தாண்டி திரையரங்குகளில் வெளியான இப்படம் தற்போது ஓடிடி-யில் வெளியாகிறது. படத்தில் நட்டியின் கேரக்டர் வடிவமைப்பு விஜயை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டது போல இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் நட்டி , தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர். இளவரசு, யாஷிகா ஆனந்த், சந்நினி தமிழரசன், ரெடின் கிங்ஸ்லி, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏப்ரல் 30ல் ஓடிடி-க்கு வரும் நட்டியின் TN 2026 - எந்த ஓடிடியில் தெரியுமா?

திரையரங்குகளில் ஏப்ரல் 10 அன்று வெளியான இந்தப் படம் வருகிற ஏப்ரல் 30 அன்று டிஜிட்டல் தளத்திற்கு வருகிறது. அமேசான் பிரைம், சிம்பிளி சௌத் , மற்றும் ஆஹா ஓடிடியில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது

From Around the web