உலக நாயகன் தொகுத்து வழங்கும், தனியார் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 5 இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், எதிர்பாராததை எதிர்பாருங்கள் என கமல் கூறுவதற்கு ஏற்ப மக்கள் சற்றும் எதிர் பாக்காத ஒன்றை இன்று ப்ரோமோவில் வெளியிட்டுள்ளர் பிக்பாஸ் குழுவினர்.
சுமார் 18 நபர்களுடன் தொடங்கபட்ட இந்த பிக்பாஸ் சீசன் இன்னும் 7 நாட்களில் நிறைவடைய உள்ளது. ஏற்கனவே டிக்கெட் டூ பைனல் போட்டியில் வெற்றி பெற்று நேரடியாக அமீர் பைனலுக்கு முன்னேறியுள்ள நிலையில் மீதமுள்ள 6 பெரும் இந்த வார எலிமினேஷனில் உள்ளனர், மேலும் இந்த வாரம் இரண்டு நபர்கள் போட்டியில் இருந்து வெளியேற்ற படுவார்கள் என எதிர்பார்க்க படுகிறது.
இந்நிலையில், தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் பிரபல நடிகர் சரத்குமார் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, அவர் தன் கையில் 3 லட்சத்திற்க்கான பரிசு தொகை கொண்ட சூட்கேஸை வைத்துள்ளார். அந்த தொகை மேலும் அதிகரிக்க படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதற்க்கு முன்பு நடைபெற்ற சீசன்களில் கவின் மற்றும் கேப்ரில்லா இந்த தொகையை எடுத்து கொண்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…