×

சுப்ரீம் ஸ்டார், சென்னையின் முன்னாள் ஆணழகனுக்கு இன்று பிறந்தநாள் 

 
pbn

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சரத்குமார். இவர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான கேப்டன் பிரபாகரன் என்ற படத்தில் அறிமுகமானார். இப்படத்தை ஆர்.கே. செல்வமணி இயக்கினார்.

அதன்பின் சூரியன், சூரியவம்சம், நாட்டாமை, திவான், வேடன், அரவிந்தன், ஐயா உள்ளிட்ட படங்களில் நடித்து சுப்ரீம் ஸ்டாராக வலம் வந்தார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோடீஸ்வரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

பின்னர், சமத்துவ மக்கள் கட்சியை நிறுவி அதன் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார். சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அதிமுகவில் இருந்து விலகி கமல்ஹாசனின் மநீம கட்சியுன் கூட்டணி வைத்தார். 


சரத்குமார், தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதி. தமிழ் திரைப்பட உலகில் நுழையும்போது எதிர்மறை வேடங்களில் நடித்து வந்தவர், சூரியன் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து சிறப்பு கவனம் பெற்றார்.

அரசியல் இயக்கங்களில் பங்கேற்ற இவர் தற்போது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்னும் அரசியல்கட்சியினை துவக்கி நடத்தி வருகிறார். இவர் 25.07.2001 - 31.05.2006 வரைநாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக மக்கள் பணியாற்றி உள்ளார். இவர் 2011ல் தென்காசி தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றினார்.

எம். இராமநாதன் மற்றும் புசுபலீலா தம்பதியினருக்கு மகனாக புதுதில்லியில் 14.7.1954 அன்று பிறந்தார். இவரது சகோதரி மல்லிகா குமார். இவர் காரைக்குடியை அடுத்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தலக்காவூர் நாடார் குடும்பத்தை சேர்ந்தவர்.

கணிதத்தில் இளங்கலை பட்டப்படிப்பை சென்னை புதுக்கல்லூரியில் படித்தார். இக்காலத்தில் சென்னை ஆணழகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சரத்குமார், திரைத்துறைக்கு வருவதற்கு முன்னரே சாயாதேவி என்பவரைக் காதலித்து, மணம் புரிந்தார். இவர்களுக்கு வரலட்சுமி, பூஜா என்னும் இரு மகள்கள் உள்ளனர். சரத்குமாருக்கு நடிகை நக்மாவுடன் ஏற்பட்ட காதலால், சரத்குமார் - சாயாதேவி திருமண வாழ்க்கை முறிந்தது.

சரத்குமார், ராடன் நிறுவனம் தயாரித்த கோடீஸ்வரன் என்னும் நிகழ்ச்சியைத் திரையில் தோன்றி வழங்கினார். அப்பொழுது ராடன் நிறுவனத்தின் உரிமையாளரும் நடிகையுமான ராதிகாவுடன் சரத்குமாருக்கு காதல் மலர்ந்தது. இருவரும் 2001ல் திருமணம் செய்துகொண்டனர். இருவருக்கும் ராகுல் என்ற மகன் 2004ல் பிறந்தார்.

1996ஆம் ஆண்டு தி.மு.கவில் சேர்ந்தார். அக்கட்சியின் வேட்பாளராக 1998ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 2002ல் திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். 2006ஆம் ஆண்டு அக்கட்சி தலைவர்களுடன்  கருத்து வேறுபாடு ஏற்பட்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் வெளியேறினார். அதிமுகவில் மனைவி ராதிகாவுடன் இணைந்து அக்கட்சிக்காக தேர்தலில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

அவரது மனைவி ராதிகா அதிமுகவிலிருந்து கட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக அக்டோபர் 2006ல் வெளியேற்றப்பட்டார். தொடந்து சரத்தும் நவம்பர் 2006ல் திரைப்பட வேலைகளை காரணமாக்கி வெளியேறினார்.

31.8.2007 அன்று, சரத்குமார் புதிய கட்சியை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி துவக்கினார். காமராசர் ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் நிலைநிறுத்துவது இக்கட்சியின் நோக்கம். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தமிழ் மக்கள் மத்தியில், இந்தியாவில் உள்ள தமிழ் அரசியல் கட்சி. கட்சி நிறுவனர் மற்றும் தலைவர் நடிகர் சரத்குமார். 

சரத்குமார் தனது ஆரம்பகால அரசியல் வாழ்க்கையில் திமுக பகுதியாக இருந்தது, பின்னர் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சேர்ந்தார். பின்னர் அவர் அதிமுக விட்டு அவர் 2011 சட்டமன்ற தேர்தலில் 31.8.2007 அன்று தனது சொந்த அரசியல் கட்சியை, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தொடங்கியது, அது அதிமுக கூட்டணியின் அங்கமாக போட்டியிட்ட 2 தொகுதிகளில் வெற்றி - தென்காசி மற்றும் நாங்குநேரி.

சினிமாவிற்காக மொட்டை போட தயங்கும் கதாநாயகர்கள் மத்தியில் இவர் சூரியன் படத்திற்காக மொட்டை போட்டு செம மாஸாக நடித்து அசத்தினார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. சரத்குமாருக்கு பெரிய பிரேக் கொடுத்த படம் இதுதான். கட்டுக்கோப்பான உடல் தான் இவருக்கு பிளஸ் பாயிண்ட். இன்று வரை தினமும் ஒர்க்அவுட் செய்து அதை மெயிண்டெய்ன் செய்து வருகிறார். 

தற்போது ரெண்டாவது ஆட்டம், அடங்காதே, நா நா, விடியல், பாம்பன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

இன்று பிறந்தநாள் காணும் சரத்குமாருக்கு நம்ம டீம் சார்பாக வாழ்த்துகள்.

From around the web

Trending Videos

Tamilnadu News