இன்று திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்: எதிர்பார்ப்பில் காந்தா
தழிழ் சினிமா உலகில் காலம் தொட்ட காலத்திலிருந்தே வெள்ளிக்கிழமை என்றால புதிய படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வரிசையில் இன்று என்னனென்ன பட்ங்கள் வெளியாகிறது என்று பார்ப்போம்.
காந்தா:
துல்கர்சல்மான் நடிப்பில் இன்று வெளியாகிறது காந்தா. 1950 காலகட்டங்களில் திரையுலகில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபகாலங்களாக துல்கர் சல்மான் நலல் கதை அம்சம் உள்ள படங்களிலேயே நடித்து வருகிறார். அந்த வரிசையில் இந்த படமும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது.
கும்கி 2:
பிரபு சலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியானது கும்கி. சூப்பர்ஹிட் அடித்த அந்த படத்தின் 2ம் பாகமாக இப்படம் உருவாகியுள்ளது. ஆனால் இதில் நாயகனாக புதுமுகங்களை வைத்து இயக்கியுள்ளார். முதல் பகத்திற்கும் இரண்டம் பாகத்திற்கும் எவ்விஉத தொடர்பும் இல்லை என்று பிரபு சலமன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மெட்ராஸ் மாஃபியா கம்பெனி:
புதுமுக இயக்குனர் ஏ.எஸ்.முகுந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மெட்ராஸ் மாபியா கம்பெனி. வடசென்னை பின்னணியில் உருவாகி உள்ள இந்த படத்தில் ஆனந்தராஜ் கதையின் நாயகனாக நடித்துள்ளார். நாயகியக சம்யுக்தா ம்ற்றும் முனிஸ்காந்த் உள்ளிட்ட ப்ல்ர் நடித்துள்ளனர். காமெடி கலந்த ஆக்சன் படமாக இது உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆட்டோகிராப் (ரீ ரிலீஸ்)
சேரன் தயாரித்து இயக்கி, நாயகனாக நடித்தது கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான படம் ஆட்டோகிராப்'. சூப்பர்ஹிட்டான இந்த படம் தற்போதைய காலத்திற்கேற்ப காட்சிகலின் நீளம் குறைக்கப்பட்டு, டிஜிட்டலில் மாற்றம் செய்யப்பட்டு இன்று ரீ ரிலிஸ் ஆகிறது. இன்றைய காலகட்ட ரசிகர்களை இப்படம் கவருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இது தவிர கிணறு, தாவூத் மற்றும் பாய் ஆகிய சிறு பட்ஜெட் படங்களும் வெளியாகிறது.
