Categories: Cinema News latest news

இன்று அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்.. இணையத்தில் ஒரே கொண்டாட்டம் தான்.!

தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர் சாம்ராஜ்யத்தையே உருவாக்கி வைத்திருக்கும் நடிகர் அஜித். இவரது நடிப்பில் படங்கள் வெளியாகினால் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவது வழக்கமான ஒன்று. அந்த முதல் நாள், முதல் காட்சி சம்பவங்களை வேறொரு படத்தில் காட்சி படுத்தப்பட்டுள்ளது.

பல தாமதங்களுக்குப் பிறகு அதர்வா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘குருதி ஆட்டம்’ இறுதியாக இன்று வெளியாகியது. ஸ்ரீ கணேஷ் இயக்கிய, அதிரடி ஆக்சன் படத்தில் பல முக்கிய கதாபாத்திரங்கள் நடித்துள்ளனர்.

தற்போது, இன்று  ரிலீஸ் ஆன இந்த படத்தின் டைட்டில் மற்றும் பட குழுவினர் பெயர்கள் வரும்பொழுது அஜித் ரசிகர்கள் என்று நன்றி தெரிவிக்கும் வகையில் படத்தின் தொடக்கம் ஆரம்பம் ஆகிறது. மேலும், படத்தின் சில காட்சிகள் இடையே ஒரு காட்சியில் விஸ்வாசம் படத்தின் முதல் நாள், முதல் ஷோ வீடியோவும் இடம் பெற்றுள்ளது.

இதையும் படிங்களேன் – இப்போ சிவகார்த்திகேயன் யாருனு தெரியுதா.? பிரபல இயக்குனரை அதிர வைத்த ‘அந்த’ பிளாஷ்பேக்…

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் இந்த படத்தினை அதர்வா ரசிகர்கள் மட்டும் கொண்டாடாமல் அஜித் ரசிகர்களும் சேர்ந்து கொண்டாடி வருகின்றனர். மேலும், இந்த படத்தின் மீதான வரவேற்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Manikandan
Published by
Manikandan