ஹனுமான் ஒரு சூப்பர் ஹீரோ... தத்ரூபமாகத் திரையில் கொண்டுவருவேன்.. உருகும் ஹாலிவுட் ஹீரோ

ஜாக்கி சான் போல ஆக்ஷன் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் நடிகர் டோனி ஜா. இவரது ஆக்ஷன் காட்சிகளுக்காகவே உலகம் முழுவதும் பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். குங்பூ உள்ளிட்ட மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைகளில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் டோனி ஜா, கடவுள் ஹனுமான் ஒரு சூப்பர் ஹீரோ என்று கூறியிருக்கிறார்.
இதுகுறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்திருக்கும் டோனி ஜா, `நான் இந்தியத் திரைப்படங்களை நெருக்கமாக ஃபாலோ பண்ணி வருகிறேன். பாலிவுட்டின் ஆக்ஷன் காட்சிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். டைகர் ஷெராஃப், வித்யூத் ஜம்வால், ராணா டகுபடி, அமீர் கான், ஷாருக்கான் ஆகியோரை நன்றாகவே தெரியும். பாலிவுட் படங்கள் அதிகம் பார்ப்பதால், அவர்களை எனக்குத் தெரியும். பாலிவுட் படங்களின் மிகப்பெரிய ரசிகன் நான். எனக்கு கடவுள் ஹனுமானையும் மிகவும் பிடிக்கும்.
ஹனுமானாக நடிக்க வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன். அவரைத் தத்ரூபமாகத் திரையில் கொண்டுவருவேன். டிசி, மார்வெல் நிறுவனங்களின் சூப்பர் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் அல்லது டெட் பூல் போன்று சூப்பர் ஹீரோவாக நடிக்க வேண்டும் என விரும்புகிறேன். எனது கனவு நிறைவேறினால் நன்றாக இருக்கும்’’ என்று ஓப்பனாக மனம்திறந்து பேட்டி தட்டியிருக்கிறார் இந்த தாய்லாந்து மாஸ்டர்.
Happy New Year 2021, Stay Well and Stay Safe. pic.twitter.com/jeXNH3Fd29
— Tony Jaa (@tonyjaaofficial) December 31, 2020