×

வயசானாலும் தகதகவென அழகில் ஜொலிக்கும் ரம்யா கிருஷ்ணன்

கமல்ஹாசனுடன் ‘பஞ்சதந்திரம்’ திரைப்படத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடிக்கத் தவறவில்லை. 
 
Ramya

தனது 14-வது வயதில் ‘வெள்ளை மனசு’என்ற படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்த ரம்யா கிருஷ்ணன், அதற்கு முன்பாகவே ‘புலரும்போள்’ என்ற மலையாள படத்தில் மம்முட்டி, மோகன்லால் உடன் இணைந்து நடித்தார்.

Ram

90-களில் முன்னணி தெலுங்கு நடிகையாக வலம் வந்த ரம்யா கிருஷ்ணன், அம்மன் படங்களிலும் நடித்து அசத்தினார். 1999-ம் ஆண்டு வெளியான ‘படையப்பா’ படத்தில் ரஜினிக்கு வில்லியாக நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரட்டிய ரம்யா கிருஷ்ணனுக்கு தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன.

Ram

கமல்ஹாசனுடன் ‘பஞ்சதந்திரம்’ திரைப்படத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடிக்கத் தவறவில்லை. ‘பாகுபலி’ படத்தில் சிவகாமி தேவி கதாபாத்திரத்தில் நடித்து நந்தி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பிரதிபலிக்கும் ‘குயின்’ வெப் தொடரிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

Ram

அந்த வகையில் பாகுபலி படத்தில் இவரின் ராஜமாதா கதாபாத்திரம் இந்தியளவில் பிரபலமானது. மேலும் தற்போது ரம்யா கிருஷ்ணன் விஜய் டிவி-ல் BB ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார், அந்நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் பச்சை நிற உடையில் அவர் பதிவிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News