×

இந்த வருடம் முதல் 5 இடத்தை பிடித்த டாப் 5 இயக்குநர்கள் யார் யார்னு தெரயுமா?

இந்த வருடம் திரைப்படங்கள் குறைவாகவே வெளிவந்திருந்தாலும் அதிகமாக புதுமுக இயக்குநர்கள் தங்கள் திறமையை காட்டி கலக்கியுள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டு அதிகம் ரசிகர்களால் பார்க்கப்பட்ட திரைப்படத்தை இங்கு பார்ப்போம்.

 

1. சுதா கொங்கரா

இறுதிச்சுற்று படத்தின் மூலமே தனது வலிமையை நிரூபித்து இருந்த இயக்குநர் சுதா கொங்கரா, சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் இன்னமும் மெருகேறி உள்ளார். இந்த ஆண்டு தமிழ் சினிமாவை இந்தியாவே திரும்பி பார்க்க வைத்துள்ளார் இயக்குநர் சுதா கொங்கரா. பாவக் கதைகள் ஆந்தாலஜியில் இவர் இயக்கிய தங்கம் படமும் பாராட்டுக்களை அள்ளி வருவது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக இளைஞர்களின் அதிக தேர்வாக இவர் உள்ளார்.

2. பெ. விருமாண்டி 

இயக்குநர் விருமாண்டி இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான க/பெ. ரணசிங்கம் திரைப்படம் ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுக்களை அள்ளியது. வெளிநாட்டில் இறந்து போன கணவரின் உடலை திரும்பி மீட்டு வர கைக் குழந்தையுடன் ஒரு மனைவி போராடிய நிஜ கதையை படமாக இயக்கி பாராட்டுக்களை அள்ளியுள்ளார்.

3. தேசிங் பெரியசாமி
இந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு கிடைத்த இன்னொரு அறிமையான இயக்குநர் தேசிங் பெரியசாமி. அறிமுக படத்தையே பாலிவுட் ரேஞ்சுக்கு இயக்கி அசத்திவிட்டார். வழக்கமான ஹீரோ, வில்லன் ஸ்க்ரிப்ட் இல்லாமல், பிளான் பண்ணி பக்காவா கொள்ளை அடிப்பவர்கள் தப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்கிற கதையை துல்கர் சல்மான், ரிது வர்மா, ரக்‌ஷன், கெளதம் மேனன் என பக்காவான காஸ்டிங்குடன் இயக்கி கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை அசத்தி உள்ளார். அடுத்த படத்துக்கு ரசிகர்கள் வெயிட்டிங்!

4. ஆர்.ஜே. பாலாஜி, 
என்.ஜே. சரவணன் சாமியை வைத்தே போலி சாமியார்களை காலி செய்ய வேண்டும் என்கிற திரைக்கதையை என்டர்டெயின்மென்ட் கலந்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை நடிக்க வைத்து மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை ஒரு பக்கா கமர்ஷியல் படமாக கொடுத்த இயக்குநர்கள் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் என்.ஜே. சரவணன் இணைந்து கலக்கிட்டாங்க.. இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள ஆர்.ஜே. பாலாஜிக்கு பாராட்டுக்கள்.

5. அந்தகாரம் – விக்னராஜன் 
இயக்குநர் அட்லி தயாரிப்பில் இயக்குநர் விக்னராஜன் இயக்கத்தில் வெளியான அந்தகாரம் திரைப்படம் ரசிகர்களை இந்த ஆண்டு மிரட்டி பாராட்டுக்களை குவித்து வருகிறது. நெட்பிளிக்ஸில் வெளியான இந்த திரைப்படத்தை அந்த அளவுக்கு ராவாக இயக்குநர் விக்னராஜன் இயக்கி அசத்தி உள்ளார். அர்ஜுன் தாஸ் மற்றும் வினோத் கிஷனின் நடிப்பு சூப்பர்.

From around the web

Trending Videos

Tamilnadu News