Categories: Cinema News latest news throwback stories

உன்ன யாரும் கூப்பிடலை கிளம்பு!..வெளிநாட்டுக்கு துரத்தி விடப்பட்ட முன்னணி நடிகர்…

தமிழ் சினிமாவில் எத்தனை பெரிய நடிகர்கள் இருந்தாலும் அவர்களின் வாரிசுகள் எளிதாக வாய்ப்பு கிடைத்து விடும். ஆனால் அதை தக்கவைத்து கொள்வது அவரவர் கையில் தான் இருக்கிறது. அப்படி தமிழ் சினிமாவில் இடத்தை பிடித்து இருப்பவர்களில் நடிகர் சிவகுமாரின் மகன்களுக்கும் இடம் உண்டு.

கோலிவுட்டின் 60ஸ்களில் பெரும் பிரபலமாக இருந்தவர் நடிகர் சிவகுமார். இவருக்கு கார்த்தி மற்றும் சூர்யா என்ற இரு மகன்கள் உண்டு. பெரிதாக அறிமுகம் தேவைப்படாதவர்கள். தொடர் வெற்றியால் தேசிய விருது வாங்கி இருக்கிறார் நடிகர் சூர்யா. கார்த்தி, வந்தியதேவனாக நடித்து சமீபத்தில் வெளியான படம் தான் பொன்னியின் செல்வன். ரசிகர்களிடம் கார்த்தியின் நடிப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

ஆனால் கார்த்தி இந்த நிலைக்கு அவ்வளவு ஈசியாக வந்துவிடவில்லை. இன்ஜினியரிங் முடித்ததும் சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்த கார்த்தி, மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்றார். தொடர்ந்து, நியூயார்க்கில் அவருக்கு புகழ்பெற்ற பல்கலைகழகத்தில் இடம் கிடைத்தது. அதில் படித்துக்கொண்டிருக்கும் போதே, திரைப்பட தயாரிப்பு குறித்தும் படித்து வந்தாராம்.

இதையும் படிங்க: அந்த இடத்தில் சூர்யாவுக்கு ஏற்பட்ட அவமானம்.! பொதுமேடையில் கலங்கி நின்ற சிவகுமார்.!

ஒருமுறை விடுமுறைக்காக ஊருக்கு வந்தவர். காசி படத்தினை பார்த்து இருக்கிறார். அதை பார்த்ததும், கார்த்திக்கு சினிமா மோகம் அதிகரித்து விட்டதாம். உடனே, ஊருக்கெல்லாம் போக முடியாது. நான் நடிக்க போகிறேன். என்ன விடுங்கப்பா என சிவகுமாரிடம் சண்டை போட்டு இருக்கிறார்.

இதில் கடுப்பான சிவகுமார், சரி இப்போ உச்சத்தில் இருப்பது பாலாவும், சங்கரும் தான். அவர்களை யாரும் உனக்கு வாய்ப்பு கொடுக்கிறார்களா? இல்லை தானே. உன் அண்ணன் நடித்தால் அவனுக்கு வாய்ப்பு கிடைத்தது நடித்தான். உன்னை யாரும் கூப்பிடல. கிளம்பு என அனுப்பிவிட்டாராம்.

கார்த்தி மீண்டும் நியூயார்க் திரும்பி தனது பட்டப்படிப்பை முடித்தார். அவருக்கு 2000களில் 1.5 லட்ச ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருக்கிறது. ஆனால், அவரோ என் நாடு இந்தியா. சினிமா என் தொழில் எனக் கூறிவிட்டு கிளம்பி வந்துவிட்டாராம். அதற்கு பின்னர், பல போராட்டங்களை சந்தித்து இந்த இடத்தை பிடித்திருக்கிறார்.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily