Connect with us
tamilgossip

Gossips

கணவனால் நடிகைக்கு வந்த சிக்கல்… இனி அக்கட தேசத்தில் வாய்ப்பு கிடைக்க வாய்ப்பே இல்லையாம்…..

காதலித்து திருமணம் செய்து கொண்ட அந்த நட்சத்திர தம்பதிகள் தங்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்வதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். விவகாரத்தால் மன உளைச்சலில் இருக்கும் அந்த நடிகை மன அமைதிக்காக ஆன்மிக சுற்றுலா சென்று அமைதியை தேடி வருகிறார்.

இந்நிலையில் கணவன் நடிகரால், நடிகைக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளதாம். அதாவது நடிகைக்கு அக்கட தேசத்தில் தான் அதிக மார்க்கெட் நிலவி வருகிறது. அதேபோல் நடிகையின் கணவரும் அங்கு டாப் நடிகராக உள்ளார். தற்போது விவாகரத்து காரணமாக நடிகைக்கு முன்பு போல் அக்கட தேசத்தில் வாய்ப்பு கிடைக்காது என்றும், கணவரே மறைமுகமாக இதை செய்து வருவதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி நடிகை ஏற்கனவே நடித்துள்ள படம் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் பிரபல நடிகர் ஒருவரின் மகள் இந்த படம் மூலம் அறிமுகமாக உள்ளதால் வெளியாவதில் சிக்கல் எதுவும் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

tamil gossip

ஆனால் நடிகைக்கு இனி பட வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பது மட்டும் உறுதி என கூறுகிறார்கள். என்ன நடக்கிறது என்னும் விஷயம் நடிகைக்கு நன்றாக புரிந்த காரணத்தால் தான் நடிகை தற்போது கோலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் வாய்ப்பு தேடி வருகிறாராம்.

விவாகரத்தால் தனது கெரியர் தொலைந்து விடுமோ என்ற பயம் நடிகைக்கு இருந்தாலும், ஒருபுறம் எப்படியாவது இழந்ததை மீண்டும் அடைந்திடலாம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து வாய்ப்பு தேடி வருகிறாராம்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Gossips

To Top