சினிமா படங்கள் தொடர்ச்சியாக சில பாகங்களை எடுப்பது சில காலமாக வளர்ந்து வருகிறது. அப்படி எடுக்கப்பட்ட சில படங்களின் இரண்டாம் பாகம் ஹிட்டாக கூட அமைந்திருக்கிறது. இது பல படங்களுக்கு நடைபெற்றாலும், சில படங்களுக்கு இந்த ராசி இல்லை என்றே தெரிகிறது. இரண்டாம் பாகத்திற்கு படக்குழு தயாராகிய சூழலில், சில காரணங்களால் கைவிடப்பட்ட தமிழ் சினிமாவின் டாப் படங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
கடலோர கிராமத்திற்கு வரும் கப்பல் பணிபுரியும் ஒருவரின் காதல் கதையே இயற்கை. இப்படத்தில் ஷாம், அருண் விஜய் மற்றும் குட்டி ராதிகா நடித்திருந்தனர். ஷாம் காதல் கைகூடாமல் கிளைமாக்ஸில் கப்பலில் ஏறி சென்று விடுவார். அவர் இன்னொரு நாட்டிற்கு சென்று இறங்கும் போது, அங்கு அவரின் வாழ்வியலை சொல்லும்படி இரண்டாம் பாகத்தை எடுக்க ஜனநாதன் முடிவெடுத்து இருந்ததாக தெரிகிறது. நார்வேயில் படத்தினை எடுக்கலாம் என்று ஷாமிடம் பேசினாராம். ஆனால்,அவரின் திடீர் இறப்பு இதற்கு பெரிய முற்றுப்புள்ளியை வைத்து விட்டது.
விஷால் நடிப்பில் மிஷ்கன் எடுத்திருந்த படம் துப்பறிவாளன். திரைக்கதையில் செம பீல் கொடுத்த இப்படம் செம ஹிட்டானது. அதை தொடர்ந்து, படத்தின் இரண்டாம் பாகத்தையும் லண்டனில் எடுத்து விடலாம் என இருவரும் முடிவெடுத்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் தான் விஷாலும், மிஷ்கினும் குடுமிப்பிடி சண்டை போட்டுக் கொண்டனர். இதனை தொடர்ந்து, விஷால் மிஷ்கினை படத்தில் இருந்து நீக்கினார். அதை தொடர்ந்து, விஷாலே படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து வேறு சில படங்களில் கமிட் ஆகி இருக்கும் விஷால் துப்பறிவாளன் படத்திற்கு கால்ஷீட் ஒதுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் இப்படம் கிடப்பில் போடப்பட்டதாகவே நம்பப்படுகிறது.
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருந்த படம் பிச்சைக்காரன். தாயின் உயிருக்காக பணக்கார மகன் பிச்சை எடுப்பது போல காட்டப்பட்டு இருக்கும். இந்த கதை பலரையும் கவர்ந்தது. படமும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட். தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவெடுத்திருக்கிறார்கள். தேசிய விருது இயக்குனர் பிரியா கிருஷ்ணசாமி இந்தப் படத்தை எடுப்பார் எனக் கூறப்பட்டது. ஆனால், ஒரு சில பிரச்சனைகளால் இப்படமும் தற்போது கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது.
சூர்யா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கிய படம் அயன். கடத்தல் செய்வோரின் வாழ்க்கை குறித்து அயன் உருவாகி இருந்தது. படமும் செம ஹிட் அடித்தது. சூர்யா மாஸ் ஹீரோ பட்டியலில் இணைத்தத்ற்கு இதுவும் ஒரு காரணம். படம் சூப்பராக இருந்ததால், இப்படத்திற்கு இரண்டாம் பாகம் வேண்டும் என பலர் கே.வி.ஆனந்திடம் கோரிக்கை வைத்தனராம். அதற்கு அவர் அயன்2 வரவே வராது. ஒரு படத்தின் கதை இன்னொரு படத்தை ஒத்து இருந்தால் அது பலருக்கு சரியாக சேராது. அதன்மீது எனக்கு பெரிய நம்பிக்கை இல்லை என பெரிய முற்றுப்புள்ளியை வைத்தார்.
வடிவேலு ஹீரோவாக நடித்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த படம் தான் இம்சை அரசன் 23ம் புலிகேசி. முழுநீள காமெடி படமான இதை சிம்புதேவன் இயக்கி இருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை 24ம் புலிகேசி என பெயரிட்டனர். அதற்கான பர்ஸ்ட் லுக் முதற்கொண்டு ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால் சிம்பு தேவன், வடிவேலுக்கு இடையே ஒரு இகோ கிளாஸ் வெடித்தது.
வடிவேலு தன் குழு தான் வேண்டும் என அடம் பிடிக்க,சிம்பு தேவனோ இல்லை என் ஆட்கள் இருக்க வேண்டும் என அடம்பிடித்தார். இதில் ஷங்கரோ அடேய்களா என் காசுடா. படத்தை எடுப்பீங்களா, இல்லையா என பிரச்சனை செய்தார். இப்படியே பிரச்சனை வெடித்தது. முதல் பாகத்தில் என்னால் பல காட்சிகள் அப்ளாஸ் வாங்கியது. அப்போது அமைதியாக இருந்த இவர் இப்போது மட்டும் ஏன் துள்ளுரார். என்னால் இந்த படத்தில் நடிக்க முடியாது என வடிவேலு காட்டமாக தெரிவித்து விட்டாராம். இதனால் இப்படமும் இப்போதைக்கு எடுக்கப்படாது என்றே கூறப்படுகிறது.
இதை படிங்க: எனக்கு நேத்து நைட்டே விடிஞ்சிருச்சி சார்….!!! வடிவேலு நெகிழ்ந்த அந்த அற்புதமான தருணம்
Manikandan: எந்த…
Ajith: நடிகர்…
Idli kadai:…
Idli kadai…
Kantara 2:…