×

தலிபான்களின் உச்சகட்ட கொடூரம்... கூடையில் குழந்தை... பெண்கள் நாய்களுக்கு விருந்தா? தொடரும் துப்பாக்கி சூடு!

இந்தியாவின் டெல்லியில் வசித்துவரும் 33 வயதான Khatera, தாலிபான்களை எதிர்க்கும் பெண்களின் உடல்கள் நாய்களுக்கு விருந்தாகும் கொடூரங்கள் இனி அரங்கேறும் என்கிறார்.
 
afghanithan001

1 . கர்ப்பிணியாக இருந்த போது தாலிபான்களின் கொடூர சித்திரவதைக்கு இலக்கான இளம் தாயார் ஒருவர், ஆப்கானிஸ்தான் பெண்களின் எதிர்காலம் தொடர்பில் கவலை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் டெல்லியில் வசித்துவரும் 33 வயதான Khatera, தாலிபான்களை எதிர்க்கும் பெண்களின் உடல்கள் நாய்களுக்கு விருந்தாகும் கொடூரங்கள் இனி அரங்கேறும் என்கிறார்.

தாலிபான்களுக்கு எதிராக குரல் எழுப்பியதாலையே, தமது இரு கண்களையும் இழந்ததாக கூறும் Khatera, தாலிபான் ஆதரவாளரும் சொந்த தந்தையுமே தமது இந்த அவல நிலைக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானின் காஸ்னி பிராந்தியத்தில் வசித்து வந்த Khatera கடந்த ஆண்டு தாலிபான்களால் கொடூரமாக தாக்கப்பட்டார். மார்பு மற்றும் வயிற்றுப்பகுதியில் 8 முறை துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.

afhan001

2. ஆப்கானிஸ்தானில் இருக்கும் காபூல் விமானநிலையத்தில் 7 மாத குழந்தை தனியாக தவிக்கும் வீடியோ வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பின்பு, அங்கிருக்கும் பல சம்பவத்தின் புகைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாக முக்கிய நகரான காபூலில் இருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் காபூலை விட்டு வெளியேறி, விமானம் மூலம் நாட்டை விட்டு வெளியேற முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், காபூல் விமான நிலையத்தில் ஒரு பிளாஸ்டிக் கூடையில் குழந்தை ஒன்று தனியாக கிடந்துள்ளது.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், விமானநிலையத்தில் கிடந்த பெற்றோர் காபுப் பிடி-5 என்ற பகுதியில் வசித்து வந்துள்ளதாகவும், அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.


3. வடக்கு ஆப்கானிஸ்தானின் ஒரு கிராமத்தில் தாலிபான்களுக்கு உணவு சமைக்க மறுத்த தாயார் ஒருவரை கொடூரமாக தாக்கி கொன்றுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

வடக்கு ஆப்கானிஸ்தானின் ஒரு குட்டி கிராமத்தில் குடியிருந்து வருகிறது Najia என்பவரின் குடும்பம். தாலிபான்கள் ஒவ்வொரு மாகாணமாக கைப்பற்றி வரும் தகவல் அறிந்து அந்த கிராமமே பீதியில் இருந்துள்ளது.

எப்போது வேண்டுமானாலும் தாலிபான்கள் கிராமத்திற்குள் நுழையலாம் என அச்சத்தில் இருந்த நிலையில், ஜூலை 12ம் திகதி நடுங்க வைக்கும் இச்சம்பவம் அந்த கிராமத்தில் அரங்கேறியுள்ளது.

திடீரென்று ஒருநாள் Najia வீட்டின் கதவைத் தட்டிய தாலிபான்கள், தங்கள் குழுவினர் 15 பேர்களுக்கு உணவு சமைத்து தர வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளனர்.

ஆனால் மிகவும் ஏழை குடும்பமான Najia அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதுடன், காரணத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த தாலிபான்கள் நான்கு பிள்ளைகளின் தாயாரான அவரை கொடூரமாக தாக்கியுள்ளனர்.

இதனால் சுருண்டு விழுந்த Najia, பின்னர் எழுந்திருக்கவில்லை, துப்பாக்கியால் கடுமையாக தாக்குதலுக்கு இலக்கான அவர் சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

ஏற்கனவே மூன்று முறை Najia வீட்டின் கதவைத் தட்டியும் திறக்காத நிலையில், நான்காவது முறை உணவு அளிக்கவும் மறுப்பு தெரிவித்ததால் தாலிபான்கள் வெறிச்செயலில் ஈடுபட்டதாக Najia-ன் மகள் 25 வயதான Manizha தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, தாலிபான்கள் அப்பகுதியை விட்டு வெளியேறும்போது தங்கள் குடியிருப்புக்குள் கையெறி குண்டை வீசிவிட்டு சென்றதாகவும் Manizha கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.   

4. ஆப்கானிஸ்தானின் தேசிய கொடிக்கு ஆதரவாக சாலையில் போராடி நூற்றுக்காணக்கான இளைஞர்கள் மீது தலிபான்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்களை கைப்பற்றியதை தொடர்ந்து நாடு முழுவதும் தேசிய கொடி அகற்றப்பட்டது.

இந்நிலையில், இன்று Nangarha மாகாணத்தில் உள்ள Jalalabad நகரில், நூற்றுக்காணக்கான இளைஞர்கள் ஆப்கான் தேசிய கொடிக்கு ஆதவாக, கொடியை ஏந்திய படி சாலையில் பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆப்கான் தேசிய கொடியை மீண்டும் ஏற்றி தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

அதாவது, தலிபான் தலைவர்கள் ஆப்கானிஸ்தானின் மூவர்ண தேசியக் கொடி மாற்றக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தப்பட்டது.

மேலும், சாலையை மறித்து கொடியை பிடித்த படி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனார்.

afhan002

afhan003

From around the web

Trending Videos

Tamilnadu News