ஹாலிவுட் ரேஞ்சுக்கு ஆபாசமா இருக்கே!.. கேஜிஎஃப் ஹீரோவா இப்படி!.. ரொம்பவே டாக்ஸிக்!

 
yash

'கே.ஜி.எஃப்' படங்களின் மூலம் இந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்ற நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் 'டாக்ஸிக்: A Fairy Tale for Grown-Ups. இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தின் ப்ரொமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

kathri

1940-கள் முதல் 1970-கள் வரையிலான கோவாவை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், அதிரடி-திரில்லர் கதையாக உருவாகியுள்ளது. வெளிப்படையாக சொர்க்கம் போல தோன்றும் கோவாவின் கடலோரப் பகுதிகளுக்குள் மறைந்திருக்கும் இருண்ட கும்பல் உலகை இப்படம் ஆராய்கிறது.

toxic

படத்தில் யாஷுடன் இணைந்து நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, தாரா சுதாரியா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படம் கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு, உலகளாவிய ரசிகர்களை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பான் இந்தியத் திரைப்படமாகும்.

nayan

ஏற்கனவே இப்படத்தின் இரண்டு டீசர்கள் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது படக்குழு புதிய அதிரடியான ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோவில், படத்தில் இடம்பெறும் ஏழு முக்கிய பெண் கதாப்பாத்திரங்கள் ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஸ்டைலிஷ் காட்சிகள், மிரட்டலான பின்னணி இசை மற்றும் மர்மம் நிறைந்த கதாப்பாத்திர அறிமுகங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

meena

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'டாக்ஸிக்' திரைப்படம், 2026 ஆகஸ்ட் 26-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தற்போது வெளியான ஏழு நடிகைகளின் கதாப்பாத்திர அறிமுக ப்ரோமோ, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் பல மடங்கு உயர்த்தியுள்ளது.

Tags

From Around the web