டாக்ஸிக் டிரைலர் ரிலீஸ் எப்போது? வெளியான செம மாஸ் அப்டேட்!..
கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்' திரைப்படத்தின் ட்ரெய்லர், வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட ஆக்ஷன்–க்ரைம் திரில்லர் திரைப்படம், ஆகஸ்ட் 26, 2026 அன்று உலகம் முழுவதும் பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படத்தில் நடிகர் யஷ்ஷுடன் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி மற்றும் ருக்மணி வசந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம், போர்த்துகீசிய காலனி ஆதிக்கம் முடிவுக்கு வந்துகொண்டிருந்த காலகட்டத்தில் கோவாவை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் மற்றும் போஸ்டர்கள் ஏற்கனவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகவுள்ள ட்ரெய்லர் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த எதிர்பார்ப்புகளுக்கு டாக்ஸிக் எந்தளவு பதிலளிக்கிறது என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
