என்னது எம்ஜிஆரும் எஸ்டிஆரும் ஒன்னா? டி.ஆர் போட்ட கண்டிசன்.. இது கொஞ்சம் ஓவர்தான்

சிம்பு வைத்த ட்ரீட்: நேற்றிலிருந்து சமூக வலைதளங்களில் சிம்புவை பற்றிய தகவல்தான் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது. நேற்று அவருடைய பிறந்தநாள் என்பதால் அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகள் வந்து கொண்டே இருந்தன. தொடர்ந்து சிம்பு நடிக்கும் மூன்று படங்களை பற்றிய அப்டேட் வெளியாகி ரசிகர்களுக்கு ஒரு பெரிய ட்ரீடாக அமைந்தது. தமிழ் சினிமாவில் பிறந்ததிலிருந்தே நடிக்கும் நடிகர் என்றால் அது சிம்புவாக தான் இருக்க முடியும்.
பிறந்ததிலிருந்தே நடிகர்: ஆறு மாத குழந்தையிலிருந்து இப்போது வரை தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் கமலும் சிம்புவும் ஒரே ரகம் தான். குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்குள் அறிமுகமாகி இன்று சினிமாவைப் பற்றிய அத்தனை நுணுக்கங்களையும் கற்று அறிந்தவர் கமல். அதற்கு நிகரான ஒரு நடிகராக இருக்கிறார் சிம்பு .இவருக்கும் சினிமாவைப் பற்றிய அத்தனை நுணுக்கங்களும் தெரியும்.
பன்முகத்திறமையாளர்: இசையமைப்பாளராக பாடகராக பாடல் ஆசிரியராக தயாரிப்பாளராக இயக்குனராக நடிகராக என பல அவதாரங்களை எடுத்து இன்று ஒரு மாபெரும் நடிகராக வளர்ந்து நிற்கிறார் சிம்பு .இந்த நிலையில் சிம்புவை பற்றி பிரபல இயக்குனர் ஒருவர் கூறிய தகவல் தற்போது வைரலாகி வருகின்றது. சிம்புவை வைத்து கெட்டவன் என்ற திரைப்படத்தை இயக்க இருந்தார் நந்தகுமார்.
சின்னவரா?: ஆனால் அந்த படம் அப்படியே டிராப்பானது. அவர்தான் சிம்புவை பற்றி ஒரு தகவலை ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். சிம்புவை படப்பிடிப்பில் பாஸ் என்றுதான் அழைப்பாராம் நந்தகுமார். அப்போது சிம்புவின் தந்தை டி ராஜேந்திரன் நந்தகுமாரை அழைத்து என் மகன் என்ன கொள்ளைக் கூட்ட தலைவனா? எதுக்கு பாஸ் பாஸ் என கூப்பிடுற? ஒழுங்கா சின்னவருன்னு கூப்பிடு என சொன்னாராம் .
அதற்கு நந்தகுமார் சின்னவரா? படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் பெயர் சொல்லி அழைக்கலாம். என்னை விட இரண்டு வயது தான் இளையவர். அதனால் தான் பாஸ் என்று கூப்பிட்டேன் எனக் கூறியிருக்கிறார். அதற்கு டி ராஜேந்திரன் எம்ஜிஆரை எப்படி கூப்பிடுவாங்கன்னு தெரியுமா? சின்னவர் அப்படின்னு தான் கூப்பிடுவாங்க. அதனால் இனிமே சிம்புவையும் சின்னவர் என்று தான் கூப்பிடனும் என நந்தகுமாரை கண்டித்து விட்டு போனாராம் டி ராஜேந்திரன் .
டி ராஜேந்திரன் கூறுவதிலிருந்து எம்ஜிரையும் சிம்புவையும் ஒன்றாகத்தான் பார்க்கிறார் என தோன்றுகிறது. இருந்தாலும் சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி ஒரு மாபெரும் ஆளுமையாக இருந்தவர் .வரலாற்றில் மிகப்பெரிய இடத்தை பிடித்தவர். அவருடைய அடைமொழி பெயரை எப்படி இவருக்கு வைக்க முடியும் என்றுதான் அனைவரின் கேள்வியாக இருக்கிறது.