×

வனிதாவுக்கு நேர்ந்த சோகம் - கணவர் பீட்டர் பால் மருத்துவமனையில் அனுமதி!

நடிகை வனிதா சினிமா வி எஃப் எக்ஸ் பொறியாளரை மூன்றாவதாக திருமணம் செய்துகொனடது கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பல பஞ்சாயத்துகளை ஏற்படுத்தியது.

 

வனிதாவின் இந்த மூன்றாவது திருமணம் குறித்து தானாக தங்களை பஞ்சாயத்து தலைவர்கள் போல எண்ணிக்கொண்டு நடிகை கஸ்தூரி, லஷ்மி ராமகிருஷ்ணன் நாஞ்சில் விஜயன் மற்றும் சூர்யா தேவி என்ற பெண் ஆகியோர் சர்ச்சைகளைக் கிளப்பினர். அவர்கள் அதனை போரையும் இடது கையால் ஹேண்டில் செய்து விட்டு சென்று கொண்டிருந்தார் வனிதா.

ஆனால், தற்ப்போது மீண்டும் அவரது வாழ்க்கையில் எதிர்ப்பாராத ஒரு சோகம் நிகழ்ந்துள்ளது. தனது கணவருடன் போரூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த நிலையில் நேற்று இரவு திடீரென பீட்டர் பாலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அங்கு அவர் தீவிர சிகிட்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News