Categories: latest news Trailer

சவுண்ட்லயே திகில கிளப்புறாங்களே!.. அதிர வைக்கும் சப்தம் டிரெய்லர் வீடியோ!…

Sabdham Trailer: இயக்குனர் ஷங்கரிடம் சினிமா கற்றவர் அறிவழகன். சென்னை திரைப்பட கல்லூரியில் இயக்கம் பற்றி படித்தவர். பாய்ஸ், அந்நியன் உள்ளிட்ட பல படங்களிலும் உதவி இயக்குனராக பணியாற்றினார். ஈரம் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார்.

தண்ணீரில் பேய் வருவது போல காட்சிகளை அமைத்து ரசிகர்களை பயமுறுத்தியிருந்தார். 2009ம் வருடம் வெளிவந்த இந்த படத்தில் ஆதி பினிசெட்டி, சிந்து மேனன், நந்தா, சரண்யா மோகன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவனை பழி வாங்க இறந்து போன கதாநாயகி தண்ணீர் உருவத்தில் வருவது போல காட்டியிருந்தனர்.

இந்த படம் நன்றாக இருக்கிறது என விமர்சனம் எழுந்து ரசிகர்கள் தியேட்டருக்கு போய் பார்க்கலாம் நினைக்கும்போது படத்தை தியேட்டரிலிருந்து தூக்கிவிட்டனர். அடுத்து நகுலை வைத்து வல்லினம் என்கிற கதையை இயக்கினார். அதன்பின் அருள்நிதியை வைத்து ஆறாது சினம் என்கிற படத்தை இயக்கினார். அதன்பின் அருண்விஜயை வைத்து குற்றம் 23 படத்தை இயக்கினார்.

அதன்பின் மீண்டும் ஆதியை வைத்து சப்தம் என்கிற படத்தை கடந்த சில வருடங்களாகவே இயக்கி வந்தார். ஈரம் படத்தில் நீரில் பேய் வருவது போல இந்த படத்தில் ஒலி மூலம் பேய் வருவது போல திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில்தான், இந்த படத்தின் டிரெய்லர் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.

அதில், ஆவிகளை ஆராய்ச்சி செய்யும் ஆதி ஒலி மூலம் ஒரு பெண் ஆத்மா சிலரை கொல்ல முயற்சிப்பதை கண்டுபிடித்து அதற்கு உதவுவது போல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. பார்ப்பதற்கு செமையான ஒரு இன்வெஸ்டிகேஷன் மற்றும் ஹாரர் திரில்லர் படம் போல இருக்கிறது. கண்டிப்பாக சப்தம் திரைப்படம் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வெற்றி பெறும் என்றே கணிக்கப்படுகிறது. சப்தம் திரைப்படம் 4 மொழிகளில் உருவாகியுள்ளது. மேலும், வருகி 28ம் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா