Categories: latest news Trailer

விக்ரம் பிரபுவுக்காக தனுஷ் செய்த சூப்பர் உதவி!.. ‘லவ் மேரேஜ்’ டிரைலர் ரொம்ப நல்லா இருக்கே!…

நடிகர் விக்ரம் பிரபு கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கடைசியாக அவருக்கு இறுகப்பற்று நல்ல வெற்றியை கொடுத்தது. அதன் பிறகு அவர் நடிப்பில் உருவாகியுள்ள லவ் மேரேஜ் திரைப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் தனுஷ் தற்போது வெளியிடுள்ளார்.

ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் மற்றும் அஸ்யூர் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனரான சண்முக பிரியன் இயக்கியுள்ளார். விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள லவ் மேரேஜ் திரைப்படம் வருகின்ற ஜூன் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும், நடிகர் சத்தியராஜ் கேமியோ ரோலில் நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையில் “பேஜாரா ஆனேன்” மற்றும் “எடுடா பாட்டில்” ஆகிய பாடல்கள் வெளியாகி 1 மில்லியனுக்கும் மேல் பார்வைகளைப் பெற்று பிரபலமடைந்தது.

இப்படம் ஒரு கிராமத்துப் பின்னணியில் காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை உள்ளடக்கிய ஒரு திரைப்படமாக உருவாகியுள்ளது. திருமணம் தாமதமாவதால் ஒருவர் குடும்பத்திலும் சமூகத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களைப் பற்றி இப்படம் பேசுகிறது. மேலும், இப்படம் 90’s கிட்ஸ்களுடன் ஒப்பிடும் படமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் இன்று லவ் மேரேஜ் படத்தின் ட்ரேயிலர் வெளியிட்டு விழா நடைப்பெற்ற நிலையில் நடிகர் தனுஷ் இப்படத்தின் ட்ரெயிலரை வெளியிட்டுள்ளார். மேலும், இப்படம் வரும் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படம் விக்ரம் பிரபுவின் முந்தைய படமான இறுகப்பற்று வெற்றிக்குப் பிறகு அவரது மற்றொரு முக்கியமான திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனுஷ்காவுடன் விக்ரம் பிரபு இணைந்து நடித்துள்ள காதி படமும் விரைவில் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

Saranya M
Published by
Saranya M