Karuppu Teaser: ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் திரைப்படம்தான் கருப்பு. மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கிய ஆர்.ஜே.பாலாஜி மூக்குத்தி அம்மன் 2 எடுக்க திட்டமிட்டு ஒரு கதையை எழுதினார். ஆனால், ஐசரி கணேஷனுடன் ஏற்பட்ட பிரச்சனையில் மூக்குத்தி அம்மன் 2 படத்தை எடுக்கும் வாய்ப்பு சுந்தர்.சிக்கு போய்விட்டது.
மூக்குத்தி அம்மன் முதல் பாகத்தில் நயன்தாராவை வைத்து இயக்கியது போலவே இதிலும் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து கதையை எழுதி இருந்தார். ஆனால், சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கப்போய்விட்டதால் கதையை ஆண் கதாபாத்திரத்திற்கு பொருந்துவது போல மாற்றினார். அதுதான் சூர்யா நடிக்க கருப்பு படமாக உருவாகியுள்ளது.
இந்த படத்தில் திரிஷா, நட்டி நடராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்க சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். சூர்யாவின் உறவினரான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்திருக்கிறது. இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. சூர்யாவுக்கு கடந்த சில வருடங்களாகவே ஹிட் படங்கள் அமையவில்லை. கங்குவா படம் தோல்வி அடைய ரெட்ரோ படம் சுமாரான வெற்றியை பெற்றது. எனவே, கருப்பு படத்தை அவர் நம்பி காத்திருக்கிறார்.
இன்று சூர்யாவின் பிறந்தநாள் என்பதால் கருப்பு படத்தின் டீசர் வீடியோவை தற்போது வெளியிட்டிருக்கிறார்கள். டீசர் முழுக்க பக்கா ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. ஆர்.ஜே.பாலாஜியா இப்படி ஒரு ஆக்ஷன் படத்தை எடுத்திருக்கிறார் என ஆச்சர்யமாகவே இருக்கிறது. டீசரை பார்க்கும்போது கண்டிப்பாக கருப்பு திரைப்படம் சூர்யாவுக்கு ஹிட் படமாக அமையும் என்றே கணிக்கப்படுகிறது.
OTT: ஓடிடியில்…
விமர்சகர்கள் வைத்த…
STR49: சின்ன…
கோட் படத்தில்…
KPY Bala:…