Connect with us

latest news

Maaresan: இந்த ஜோடி தரமா இருக்கே… வடிவேலு – ஃபகத்தின் மாரீசன் டீசர் எப்படி இருக்கு?

Maaresan: தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான வடிவேலு மற்றும் ஃபகத் பாசில் இருவர் நடிப்பிலும் உருவாகி வரும் மாரீசன் திரைப்படம் டீசர் வெளியாகி இருக்கிறது.

‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகு, அதிக வரவேற்பைப் பெற்ற ஜோடி ஃபஹத் ஃபாசில் மற்றும் வடிவேலு மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் மாரீசன். இப்படத்தின் கதையில், மாரி மற்றும் ஈசன் என்ற இரண்டு நண்பர்களின் பயணத்தை மையமாகக் கொண்டுள்ளது.

ஒருநாள் பயணத்தில் பல திருப்பங்களையும், சுவாரஸ்யமான சம்பவங்களையும் கொண்டுள்ளது இப்படம். சுதீஷ் சங்கர் இயக்கும் இப்படத்தினை ஆர்.பி.செளத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.

சமீபத்தில் வெளியாகிய இப்படத்தின் போஸ்டரில், இருவரும் முகமுகமாக நிற்கும் வகையில் இருந்தது. மேலும் வடிவேலுவின் முகத்தில் காயம் வேறு இருப்பது போல அமைக்கப்பட்டதும் ரசிகர்களிடையே படம் குறித்த பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். அடுத்த மாதம் வெளியாகும் இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் பெரிய தொகைக்கு வாங்கி இருக்கிறது. ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கும் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது.

இந்த டீசர் முற்றிலும் வித்தியாசமாக மாயா பஜார் படத்தின் ஆஹா இன்ப நிலவே பாடலை பின்னணியில் கொண்டு வடிவேலு மற்றும் பஹத்தின் பைக் பயணத்தினை காட்சிப்படுத்தி இருக்கிறது. சண்டை, அழுகை, காமெடி, விளையாட்டு என எல்லாமே இந்த டீசரில் இருக்கிறது.

ஃபகத் மட்டுமல்லாமல் வடிவேலு மற்றும் கோவை சரளா இருவருக்குமே இது வித்தியாசமான வேடமாக இருக்கும் போல. இந்த படத்தின் டீசரே கணிக்க முடியாமல் இருப்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top