Train: படம் சூப்பர் ஹிட் அடிச்சாலும் தாணுவுக்கு நஷ்டம்தான்!.. மிஷ்கின் காரணமா?!..
கலைப்புலி தாணு தயாரிப்பில் மிஷ்கின் இயக்கியிருக்கும் திரைப்படம் ட்ரெயின். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருக்க ஸ்ருதிஹாசன், நாசர், ஜெயராம், யோகி சேது உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
நேற்று இந்த படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதோடு படத்தின் மீது எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், இது தொடர்பான விழாவும் நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பேசிய கலைப்புலி தாணு வருகிற ஆகஸ்ட் மாதம் ட்ரெயின் திரைப்படம் வெளியாகும் என கூறியிருக்கிறார். இந்த விழாவை மிகவும் கலகலப்பாக நடந்தது..
இந்நிலையில்தான், டிரெய்ன் திரைப்படம் ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தாலும் கூட தயாரிப்பாளர் தாணுவுக்கு ரூ.20 கோடி வரை நஷ்டம் வரும் என்கிறார்கள். ஏனெனில் இந்த படத்தின் சூட்டிங் இரண்டரை வருடங்களுக்கு முன்பு துவங்கியது. பல காரணங்களால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.
இரண்டரை வருடங்கள் ஷூட்டிங் நடந்ததால் ஃபைனான்சியரிடம் வாங்கிய பணத்திற்கு வட்டியே பல கோடி என்கிறார்கள். இதனால் தயாரிப்பாளர் தாணுவுக்கு நஷ்டம்தான் ஏற்படும் என்கிறார்கள். அதேநேரம் நஷ்டத்திற்கு மிஷ்கின் காரணமாக இருக்க மாட்டார்.. ஷூட்டிங் தொடர்ந்து நடக்காததே இதற்கு காரணம் என சிலர் சொல்கிறார்கள்.
