Categories: Cinema News latest news

விஜய் அரசியலில் புலியா..? பால் குடிக்கும் பூனையா..? பாய்ந்து அடித்த டி.ஆர்

விஜயின் அரசியல் பயணத்தை இயக்குனர், நடிகருமான டி.ராஜேந்திரன் தனது பாணியில் விமர்சித்துள்ளார். அவர் சொந்தமாக நடத்தி வரும் டி.ஆர்.டாக்கீஸ் என்ற youtube சேனலில் விஜயின் அரசியல் போக்கை விமர்சித்துள்ளார் அதில் திரையுலகில் விஜய்க்கு அதிக ரசிகர் கூட்டங்கள் இருக்கிறது. விஜய் பற்றி நான் பேசுவதால் விஜய்க்கு நான் ஆதரவோ அல்லது எதிர்ப்போ கிடையாது.

விஜயை எனக்கு பிடிக்க ஆரம்பித்தது எப்போ என்றால் அவர் நடித்த ’பூவே உனக்காக’ படத்தில் நடித்த போதுதான். அதன்பிறகு பாசில் இயக்கிய ’காதலுக்கு மரியாதை’ படத்திலிருந்து விஜய் மீது எனக்கு ஒரு மரியாதை ஏற்பட்டது. இந்த சினிமா உலகத்தில் எல்லாரையும் எல்லாருக்கும் பிடிக்காது. வேலாயுதம் படத்தில் அவரிடம் டிடிஆர் தெரியுமா? என்று கேட்பார்கள் அதற்கு விஜய் எனக்கு அதெல்லாம் தெரியாது எனக்கு டி.ஆர்தான் தெரியும் என்று என் பெயரை பயன்படுத்தி இருப்பார்.

அந்த சமயத்தில் எனக்கும் விஜய்க்கும் ஒரு சின்ன நட்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு ’புலி’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு என்னை அழைத்தார்கள். பொதுவாகவே எனக்கு புலி என்றால் பிடிக்கும். அதனால்தான் அந்த ஆடியோ லான்சில் வாடா புலி, அந்த புலி, இந்த புலி என்று அவரை வாழ்த்தினேன். புகழ் பாடினேன். சினிமா உலகில் அவர் அறிமுகமாகும் பொழுது அவருக்கு எவ்வளவோ தரம் தாழ்ந்த பேச்சுக்கள் வந்திருக்கும். ஆனால் அதை எல்லாவற்றையும் மீறி ஒவ்வொரு படத்திலும் அவரை நடிக்க வைத்து மேலே கொண்டு வந்தது அவருடைய அப்பா எஸ் சி சந்திரசேகர்.

#image_title

அப்படி சினிமா உலகத்தில் விஜய் படிப்படியாக முன்னேறி ஒரு இடத்தை பிடித்தார். அப்படி கஷ்டப்பட்டு கலையுலகத்தில் ஒரு புலியாக பாய்ந்து அடித்தார். சமகாலத்தில் அஜித் தலயாக வளர்ந்து வந்தாலும் தன்னுடைய தலையை எங்கேயுமே தளரவிடாமல் தளபதியாக உயர்ந்தார்.

எல்லாவற்றுக்கும் மேல் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு நடிகன் முன்னணி ஹீரோவாக என்று நிற்கிறார் என்றால் அவர் நிஜமாக ஒரு புலி தான். அரசியலில் அவர் புலியா இல்லையா என்பதை எனக்கு சொல்ல தெரியவில்லை. ஆனால் சில அரசியல் கட்சிக்காரர்களின் வயிற்றில் புளியை கரைத்து விட்டார் என்பது மட்டும் உண்மை”.

Published by
SATHISH G