Categories: latest news television

மனோஜை சிக்க வச்சியே டிஆர்பியில் சாதித்த சிறகடிக்க ஆசை…டைரக்டரே தெரிஞ்சிக்கோங்க…

தமிழ் சீரியலில் பல வாரம் கழித்து மீண்டும் தன்னுடைய முதலிடத்தினை சிறகடிக்க ஆசை சீரியல் பிடித்து இருக்கிறது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் சுவாரஸ்ய தகவல்கள்.

பெரும்பாலும் குடும்ப பெண்கள் தான் சீரியல் பார்ப்பார்கள். ஆனால் ஆண்களை அவ்வளவு எளிதாக கவர்ந்த சீரியல் சிறகடிக்க ஆசை. இதன் வெற்றிக்கு முக்கிய காரணம் சீரியல் ஹீரோ வெற்றி வசந்த் தான் எனக் கூறப்படுகிறது. 

கடந்த சில வாரங்களாக தொய்வை சந்தித்த சிறகடிக்க ஆசை.ரசிகர்களின் ஆசைக்கிணங்க மீண்டும் மனோஜை தொக்காக சிக்க வைத்து முதலிடத்தினை பிடித்து இருக்கிறது. இந்த வார முடிவில் 8.92 ரேட்டிங் வாங்கி முதலிடத்தில் இருக்கிறது.

கடந்த வாரம் சிறகடிக்க ஆசைக்கு போட்டியாக இருந்த சன் டிவியின் சிங்கப் பெண்ணே 8.18 ரேட்டிங் மட்டுமே வாங்கி இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. 7.78 ரேட்டிங்குடன் சன் டிவியின் கயல் சீரியல் மூன்றாம் இடத்தினை பெற்றுள்ளது. நான்காம் இடத்தில் 7.65 ரேட்டிங்குடன் சன் டிவியின் மருமகள் சீரியல் இடம் பெற்றுள்ளது.

ஐந்தாவது இடத்தில் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் இடம் பெற்று இருக்கிறது. கடந்த சில வாரங்களாகவே பாக்கியலட்சுமியில் விறுவிறுப்பான கதைக்களம் நகர்ந்து வருவதால் தற்போது ஐந்தாவது இடத்துக்கு முன்னேறி இருப்பதாக கூறப்படுகிறது. சன் டிவியின் சீரியலிலே ஆதிக்கம் செலுத்தி வந்தாலும் முதலிடத்துக்கு சரியான சீரியலை கொடுக்க முடியாமல் திணறி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily