Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ட்ரெட்மில் அஸ்வின் குமாரின் “பெட் டான்ஸ்” இணையத்தில் வைரல்!

கார்த்திக் நரேன் இயக்கிய துருவங்கள் 16 என்ற படத்தில் நடித்த அஸ்வின் குமார் டிரெட் மில்லில் அண்ணாத்த ஆடுறார் பாடலுக்கு நடனமாடும் ஒரு வீடியோ கடந்த வாரம் வைரல் ஆனது. பிசுறு தட்டாமல் அப்படியே கமல் போலவே கெட்டப் போட்டு டான்ஸ் ஆடிய அந்த விடேய் செம வைரலானது.

a483c9e2019f95551ad4f3696bd7d8be-1

அதனை கமலே பார்த்து தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் செய்த  நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை என கூறி பாராட்டினார்.

அதைத்தொடர்ந்து தளபதி ரசிகர்களின் கோரிக்கை ஏற்று விஜய்யின் மாஸ்டர் பட வாத்தி கம்மிங் பாடலுக்கு டிரெட்மில்லில் நடனம் ஆடி வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு “என் டிரெட்மில் டான்ஸ் வீடியோவை வைரலாக்கி, அது லெஜன்டை சென்றடைய வைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது டிரெட்மில்லில் வாத்தி கமிங் என்று கூறி விஜய் ரசிகர்களை குஷி படுத்தினார்.

இந்நிலையில் தற்போது தனது நடன முயற்சியின் அடுத்தகட்டமாக “பெட் டான்ஸ்” ஆடிய வீடியோவை வெளியிட்டு அசத்தியுள்ளார். படுக்கையில் படுத்தபடியே தனது மகனுடன் வித்யாசமான ஸ்டெப் போட்டு அசத்திய இந்த “பெட் டான்ஸ்” வீடியோ  தற்ப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top