×

இந்திய அளவில் டிரெண்டிங் ஆகும் ‘GoBackStalin - அதிர்ச்சியில் திமுக

 

ராமாநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் உள்ளது. நேற்று தேவரின் 113வது ஜெயந்தி விழா  மற்றும் 58வது குருபூஜை விழா நடைபெற்றது. 

எனவே, அதிமுக தரப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக தரப்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் அங்கு சென்று தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர். மேலும், அவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

அப்போது, ஸ்டாலினுக்கு திருநீர் கொடுக்கப்பட்டது. ஆனால், அதை அவர் நெற்றியில் பூசாமல் கீழே போட்டுவிட்டார். இந்த சம்பவம் வீடியோவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து #GoBackStalin என்கிற ஹேஷ்டேக் டிவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங் ஆகி வருகிறது. 

மேலும் #தேவரை_அவமதித்த_ஸ்டாலின் என்கிற ஹேஷ்டேக்கும் டிரெண்டிங்கில் உள்ளது.

மு.க.ஸ்டாலின் அங்கு செல்லாமல் இருந்திருக்கலாம். சென்றுவிட்டு திருநீரை கீழே போட்டுவிட்டது அந்த சமுதாயத்தை சேர்ந்த பலரின் கண்டனத்திற்கும் உள்ளாகியுள்ளது.


 

From around the web

Trending Videos

Tamilnadu News