×

பீர் குடிக்க சென்ற இடத்தில் தகராறு – நண்பனைத் தாக்கினாரா திருச்சி சிவா மகன்!

திமுக வைச் சேர்ந்த திருச்சி சிவா மகன் சூர்யா நண்பர்களுடன் சேர்ந்து நட்சத்திர விடுதியில் தகராறு செய்ததாக புகார் எழுந்துள்ளது.

 

திமுக வைச் சேர்ந்த திருச்சி சிவா மகன் சூர்யா நண்பர்களுடன் சேர்ந்து நட்சத்திர விடுதியில் தகராறு செய்ததாக புகார் எழுந்துள்ளது.

திமுகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா. நாடாளுமன்றத்தில் தனது பேச்சின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர். இந்நிலையில் இவரின் மகன் சூர்யா இப்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். தனது பிறந்தநாளை சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் தனது நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார் சூர்யா. அப்போது அங்கு வந்த நண்பர் ஸ்ரீராம் என்பவரை அழைத்துக் கொண்டு மீண்டும் குடிக்க சென்றுள்ளார். அப்போது வாங்கிய 4 பியர்களுக்காக தனது ஏடிஎம் கார்டைக் கொடுத்துள்ளார். ஆனால் அதில் பணம் வரவில்லை என சொல்லப்படுகிறது.

இதனால் சூர்யா மற்றும் நண்பர்கள் சேர்ந்து ஸ்ரீராமைக் கேலி செய்ய ஒரு கட்டத்தில் அந்த வாக்குவாதம் கைகலப்பு வரை சென்றதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து ஸ்ரீராம் அவசர உதவி எண்ணான 100 க்கு அழைத்து சூர்யா உள்ளிட்டவர்கள் தன்னை தாக்க வருவதாக புகார் அளித்துள்ளார். இதையடுத்து தேனாம்பேட்டை  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News