Connect with us
vijay

Cinema News

த்ரிஷா அக்கா விஜய் சொல்லாததையா மன்சூர் சொல்லிட்டாரு? பொங்கி எழும் நெட்டிசன்கள்

Trisha vs Mansoor ali Khan: தற்போது சமூக வலைதளங்களில் மன்சூர் அலிகான் த்ரிஷாவை பற்றி பேசிய கருத்துதான் கொழுந்து விட்டு எரிகின்றது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக த்ரிஷா தன்னுடைய இணையதள பக்கத்தில் கண்டனமும் தெரிவித்திருக்கிறார்.

த்ரிஷாவிற்கு ஆதரவாக நடிகை மாளவிகா மோகன் மற்றும் லோகேஷும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றனர். ஒரு பொது இடத்தில் அதுவும் திரைத்துறையில் மிகவும் பிரபலமான நடிகையை குறித்து மன்சூர் அலிகான் இப்படி பேசியது திரைத்துறையினருக்கு மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

இதையும் படிங்க: இந்த பருப்பெல்லாம் என்கிட்ட வேகாது!. போய் வேலைய பாருங்கடா!. மன்சூர் அலிகான் காட்டம்…

என்னை வில்லனாகவே போட மாட்டிக்கிறார்கள்.  லியோ படத்தில் த்ரிஷா நடிக்கிறார் என்று சொன்னதும் கண்டிப்பாக பெட் ரூம் சீன் இருக்கும் என நினைத்தேன். குஷ்புவை தூக்கின மாதிரி, ரோஜாவை அந்த காலத்தில் தூக்கின மாதிரி திரிஷாவையும் தூக்கிடலாம் என நினைத்தேன்.  நாம பாக்காத ரேப்பா? ஆனால் வில்லனா நடிக்க விடல என்று கூறியிருந்தார் மன்சூர்.

இவர் பேசிய இந்த வீடியோதான் இப்போது இணையத்தில் தீயாய் பரவுகின்றது. இது த்ரிஷா காதிற்கு செல்ல மன்சூர் அலிகானுக்கு தன்னுடைய கண்டனத்தை தெரிவித்திருக்கிறார் த்ரிஷா. ஆனால் நெட்டிசன்கள் வேறு ஒரு புதிய பிரச்சினையை கொண்டு வந்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: இவங்கலாம் பண்ணும்போது நாம ஏன் பண்ணக்கூடாது!.. லோகேஷை கனகராஜை சீண்டும் சந்தானம்!..

அதாவது வாரிசு பட நேரத்தில் நடிகர் ஷியாம் விஜய் குறித்து ஒரு தகவலை பகிர்ந்திருந்தார். ஷியாம் ஹீரோவாக அறிமுகமான படம் 12பி. முதல் படத்திலேயே ஜோதிகாவும் சிம்ரனும் ஷியாமிற்கு ஜோடியாக நடித்திருந்தனர்.

இந்த தகவலை ஷியாம் விஜயிடம் சொன்னதும் விஜய் ‘முதல் படத்திலேயே இரண்டு குதிரைகளா’ என்பது மாதிரி கூறியிருந்தார். இப்போது த்ரிஷா மன்சூர் சொன்னதுக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில் விஜய் குதிரை என்று சொல்லியிருக்கிறாரே? அப்போதெல்லாம் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று த்ரிஷாவிற்கு எதிராக நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இவங்கலாம் பண்ணும்போது நாம ஏன் பண்ணக்கூடாது!.. லோகேஷை கனகராஜை சீண்டும் சந்தானம்!..

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top