தளபதியை கேட்டேன்னு சொல்லுங்க அக்கா!.. த்ரிஷாவோட ரியாக்ஷனை பார்க்கணுமே!..
ஆர்ஜே பாலாஜி, த்ரிஷா, சாய் அபயங்கர், அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்ட பிரபலங்கள் சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் கருப்பு படத்தை ரசிகர்களுடன் நேரில் சென்று பார்த்துக் கொண்டாடினர். அப்போது த்ரிஷாவை காரில் செல்லும் போது ரசிகர் ஒருவர் பார்த்து சொன்ன விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பல தடைகளை மீறி இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. நீண்டநாள் எதிர்பார்ப்புக்குப் பிறகு வெளியான இப்படம், முதல் நாளிலேயே திரையரங்குகளில் கொண்டாட்ட சூழலை உருவாக்கியுள்ளது. அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்குகள் முன்பு திரண்டு பட்டாசு வெடித்து, பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்து உற்சாகமாக கொண்டாடினர்.
‘கருப்பு’ திரைப்படத்திற்கு முன் தளபதி விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளனர். குறிப்பாக படத்தின் ஆக்ஷன் காட்சிகள், அரசியல் பின்னணி வசனங்கள் மற்றும் இசை ரசிகர்களை கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் பலரும் சூர்யாவின் கம்பேக் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த நடிகை த்ரிஷாவின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திரையரங்கில் படம் பார்த்துவிட்டு காரில் ஏறிச் செல்லும் த்ரிஷாவை ரசிகர்கள் சூழ்ந்தனர். அப்போது ரசிகர் ஒருவர் “தளபதிய கேட்டேன்னு சொல்லுங்கக்கா!” என்று உற்சாகமாக கூறினார். இதைக் கேட்ட த்ரிஷா சிரித்துக்கொண்டே ரசிகர்களை நோக்கி கையை அசைத்து டாடா காட்டிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. த்ரிஷாவின் எளிமையான நடத்தை மற்றும் ரசிகர்களுடன் அவர் பகிர்ந்த அந்த சிரிப்பு தருணம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் ‘கருப்பு’ திரைப்படம் தொடர்பான வீடியோக்கள், ரசிகர்கள் கொண்டாட்டங்கள் மற்றும் பிரபலங்களின் கருத்துகள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகின்றன.
