×

ரஜினி, அஜித், நயன்தாராவுக்கு ஒரு நியாயம்.. எனக்கு ஒரு நியாயமா?... ஓவராக ஆட்டம் போடும் திரிஷா.....

 
ரஜினி, அஜித், நயன்தாராவுக்கு ஒரு நியாயம்.. எனக்கு ஒரு நியாயமா?... ஓவராக ஆட்டம் போடும் திரிஷா.....

முன்னணி நடிகையாக இருந்த நடிகை திரிஷா தற்போது மூத்த நடிகையாக மாறிவிட்டார். ஆனாலும், சில படங்களில் நடித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பே அவர் நடித்து முடித்த திரைப்படம் ‘பரமபதம் விளையாட்டு’. இப்படத்திஅ 24 ஹவர்ஸ் நிறுவனம் தயாரிக்க, திருஞானம் என்பவர இயக்கியுள்ளார். சில காரணங்களால் இப்படம் வெளியாகவில்லை. தற்போது 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி என்பதால் ஓடிடியில் படம் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திரிஷாவுக்கு தயாரிப்பு நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.  அதாவது ஒரு திரைப்படம் வெளியாகும் முன்பு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்வது, தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுப்பது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் கலந்து கொள்ள வேண்டும். 

ஆனால், பரமபதம் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு நான் வர மாட்டேன் என திரிஷா அடம்பிடித்து வருகிறாராம். ரஜினி, அஜித், நயன்தாரா ஆகியோர் எந்த புரமோஷன் நிகழ்ச்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை. என்னை மட்டும் ஏன் அழைக்கிறீர்கள்? என அம்மணி கறார் காட்டுகிறாராம். இத்தனைக்கும், படத்தின் புரமோஷன் விழாவில் கலந்து கொள்வதாக ஒப்பந்ததில் அவர் கையெழுத்திட்டுள்ளாராம். ஆனாலும், நான் வரமாட்டேன் என உறுதியாக கூறிவிட்டாராம்.

எனவே, திரிஷா நடிக்கும் திரைப்படங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை எனக்கூறி மறைமுகமாக அவரின் படங்களுக்கு தடை விதிக்கலாமா என தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் வட்டத்தில் ஆலோசனை நடைபெற்றுவருவதாக செய்திகள் கசிந்துள்ளது.

புரமோஷன் என்பதே படத்தின் வியாபாரத்திற்காகத்தான். ரஜினி, அஜித், நயன்தாரா ஆகியோர் நடிக்கும் திரைப்படங்களுக்கு புரமோஷனே தேவையில்லை. ரசிகர்கள்கள் தியேட்டருக்கு வருவார்கள். 

ஆனால், திரிஷா அந்த வரிசையில் இருக்கிறாரா என்ன?...
 

From around the web

Trending Videos

Tamilnadu News