Categories: Cinema News latest news

கில்லி எஃபெக்ட்!.. திரிஷாவை பார்க்க கேரவனை முற்றுகையிட்ட ரசிகர்கள்.. எந்த இடம்.. என்ன படம் தெரியுமா?

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து ரசிகர்களை கவர்ந்த திரிஷா கடந்த ஆண்டு லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும் நடித்து மீண்டும் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில், தற்போது கில்லி ரீ ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், ஈரோட்டில் திரிஷா தனது புதிய படத்தில் கலந்து கொண்டதை அறிந்த ரசிகர்கள் அவரது கேரவனை முற்றுகையிட்டு பெருங்கூட்டமாக பார்க்க காத்துக் கிடந்தனர்.

ரசிகர்கள் வந்திருப்பதை அறிந்த நடிகை திரிஷா தனது கேரவனில் இருந்து வெளியே வந்து ரசிகர்களை பார்த்து கையசைத்து விட்டும் வணக்கம் தெரிவித்து விட்டும் சென்ற காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.

இதையும் படிங்க: என்ன அமல் டேவிஸ்!.. சச்சின் இல்லாத நேரம் பார்த்து ரீனுவுக்கு ரூட் விடுறியா.. காண்டான ஃபேன்ஸ்!..

23 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் நடிகர்கள் நீடிப்பதே சவாலான விஷயமாக உள்ள நிலையில், திரிஷா இப்பவும் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருவது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. கில்லி ரீ ரிலீஸ் படத்தில் திரிஷா நடனமாடிய “அப்படி போடு” பாடலுக்கு  ஒட்டுமொத்த தியேட்டரும் எழுந்து ஆட்டம் போட்டு வருகிறது.

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரு நாட்களிலும் தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல் ஆகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகை திரிஷா அடுத்ததாக கமல்ஹாசனின் தக் லைஃப் படத்திலும், அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: கில்லி படத்துல திரிஷா இல்லை நான்தான் நடிக்க வேண்டியது!.. தேவையில்லா சகவாசத்தால் மிஸ் பண்ணிட்டேன்!..

தெலுங்கில் சிரஞ்சீவியின் விஷ்வம்பரா படத்திலும் மலையாளத்தில் டொவினோ தாமஸின் ஐடென்டிடி படத்திலும் திரிஷா நடித்து வருகிறார். மலையாள படமான ஐடென்டிடி படத்தின் படப்பிடிப்பு தான் தற்போது ஈரோட்டில் நடைபெற்று வருகிறது. அங்கே திரிஷா நடித்து வருகிறார் என்பது தெரிந்ததும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலரும் திரிஷாவை நேரில் காண பெருங்கூட்டமாக அலைமோதினர். அவர்களை நடிகை திரிஷா கேரவனில் இருந்து வெளியே வந்து சந்தித்து சந்தோஷப்படுத்தியுள்ளார்.

Saranya M
Published by
Saranya M