கருப்பு எனது மாயாஜால வெற்றி.... திரிஷா ஹேப்பி போஸ்ட்!
நடிகை திரிஷா:
நட்சத்திர ஹீரோயினாக இருந்து வரும் நடிகர் திரிஷா தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி அங்கீகாரத்தை படைத்திருக்கிறார். ஸ்டார் நடிகையாக தற்போதும் திகழ்ந்து வருகிறார்.

முன்னணி இளம் ஹீரோயின்களை ஓரங்கட்டும் அளவுக்கு திரிஷாவின் மார்க்கெட் பிசியாக இருந்து வருகிறது. தற்போது சூர்யாவுடன் சேர்ந்து கருப்பு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாவதில் பைனான்ஸ் பிரச்சனை ஏற்பட்டாலும் படம் வெளியாகி மாபெரும் வெற்றியை குவித்து இருக்கிறது .

மாயாஜால வெற்றி....
கிட்டத்தட்ட ரூ.150 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி மாபெரும் சாதனை படைத்துள்ளது. இந்த படத்தின் வெற்றி குறித்தும் படத்தின் ஷூட்டிங்கில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள திரிஷா....கருப்பு எனது மாயாஜால வெற்றி. இது ஒன்று மட்டுமே போதும் இவை அனைத்தும் இறைவனின் திருவிளையாடல்களே.
