×

அதிரடி ஆக்‌ஷனில் த்ரிஷா - பிப்.28ம் தேதி வெளியாகும் பரமபத விளையாட்டு

 

நடிகை திரிஷா துவக்கத்தில் மற்ற நடிகைகளைப் போல் காதல் திரைப்படங்களில் நடித்து வந்தாலும், கடந்த சில வருடங்களாக அவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரங்களை தேடித் தேடி நடித்து வருகிறார்.

அவர் அப்படி நடித்துள்ள திரைப்படம்தான் பரமபத விளையாடு. இப்படம் அரசியல் திரில்லராக உருவாகியுள்ளது. இப்படம் மூலம் திரிஷா ஒரு ஆக்‌ஷன் கதாநாயகியாகவும் மாறி சண்டைக்காட்சிகளில் அசத்தியுள்ளார். மேலும், உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மருத்துவராக பணிபுரியும் அராஜகத்தை கண்டு பொங்கி எதிரிகளை பந்தாடுவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது

இப்படத்தை கே. திருஞானம் என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில் நந்தா துரைராஜ் மற்றும் வேலா ராமமூர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார். இப்படம் திரிஷாவுக்கு 60வது படமாகும்.  இப்படத்தின் டிரெய்லர் வீடியோ ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது வருகிற 28ம் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

வித்தியாசமான வேடத்தில் திரிஷா நடித்திருப்பதால் இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News