×

விட்டு சென்ற ராணாவை நினைத்து நினைத்து ஏங்கி மனஉளைச்சலுக்கு ஆளான திரிஷா!

தமிழ் சினிமாவில் ஹிரோயின் தோழியாக நடித்து வந்த திரிஷா லேசா லேசா திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படம் 2001ம் ஆண்டு வெளியானது. கடந்த 18 வருடங்களாக தமிழ் சினிமாவில் அவர் முன்னணி நடிகைகளில் ஒருவராக நடித்து வருகிறார்.

 

மேலும், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தள பக்கங்களிலும் அவர் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதில், தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். மேலும், சமூக அக்கறையுடன் கூடிய பதிவுகளையும் அவர் பதிவிட்டு வருகிறார். ஆனால், கடந்த ஜூன் மாதம் முதலே அவர் சமூகவலைத்தளங்களில் இருந்து விலகியே இருந்தார். மீராமிதுன் அவரை வம்பிழுத்தும் கூட அவர் எந்த பதிலும் கூறவில்லை. புகைப்படங்கள் பதிவிடுவதையும் நிறுத்திக்கொண்டார்.

இதையடுத்து திடீரென இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்த பழைய புகைப்படங்கள் நீக்கிவிட்டார். தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் 7 புகைப்படங்கள் மட்டுமே இருக்கிறது. திரிஷாவின் முடிவுக்கான காரணம் என்னவென்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வந்த ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. அதாவது ராணா - த்ரிஷா இருவரும் சில காலம் காதலித்து வந்தது ஊரறிந்த உண்மை. சில காரணங்களால் இந்த காதல் முறிந்துவிட்டது. இதையடுத்து அண்மையில் ராணா வேறு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதை த்ரிஷாவால் ஏற்றுக்கொள்ள முடியாமல் அவருடன் வாழ்ந்த நாட்களை எண்ணி எண்ணி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டாராம்.

From around the web

Trending Videos

Tamilnadu News